பக்தர்களின் வருகை அதிகரிப்பு - நள்ளிரவு 12 மணி வரை அன்னதானம் வழங்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு

Update: 2022-04-20 12:15 GMT

திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானத்தை நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.


கோடை காலத்தில் தொடர் விடுமுறை வருவதால் திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க கூட்டம் அதிகரித்து வந்த காரணத்தினால் பக்தர்களின் வருகையும் அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு பின் தற்போது திருமலை திருப்பதியில் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் இலவச தரிசனத்தில் காத்திருப்பு அறைகளில் பக்தர்கள் 7 முதல் 8 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.


காத்திருப்பு அறைகளில் பக்தர்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர், உணவு, பால், சிற்றுண்டி உள்ளிட்டவை அளிக்கப்பட்டு வருகின்றன, பக்தர்களின் சேவையில் ஸ்ரீவாரி சேவார்த்திகள் அதிக எண்ணிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்களின் வருகை அதிகம் இருப்பதால் தொடர் விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களில் வி.ஐ.பி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது இந்த நிலையில் திருப்பதி அன்னதான கூடத்தில் நள்ளிரவு 12 மணி வரை உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் வருகை தகுந்தவாறு லட்டு, வடை உள்ளிட்ட பிரசாதங்கள் தயார் செய்யப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News