குடிநீரில் கலக்கும் கழிவுநீர்.. 12 குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை.. நடவடிக்கை எடுக்குமா தி.மு.க அரசு?

Update: 2024-07-13 04:13 GMT

தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியின் கீழ் மக்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையிலும், ஒரு வித அச்சத்துடன் இருக்கக்கூடிய சூழ்நிலையிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் திராவிட மாடல் மகளிருக்கு முற்றிலும் இலவச பேருந்து திட்டத்தை கொண்டு வந்தது. ஆனால் அரசு பேருந்துகளே முற்றிலும் காலாவதியான நிலையில் தற்போது உள்ளது, சில இடங்களில் மகளிரை ஏற்றாமலும் அரசு பேருந்துகள் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்து வரத்தான் செய்கிறது. பள்ளிக்கூடத்தில் காலை உணவை திட்டத்தை கொண்டு வந்தது அரசு. ஆனால் பள்ளியில் வழங்கும் உணவு தரமற்று இருப்பதாகவும், மாணவர்கள் அதனை குப்பையில் கொட்டியதையும் செய்தித்தாள்களிலும் செய்தி ஊடங்கங்களிலும் நாம் பார்த்திருக்கிறோம். இந்த நிலையில் தற்பொழுது 12 மாணவ, மாணவிகள் குடிநீருடன் கலந்த கழிவு நீரை குடித்ததன் காரணமாக தற்போது மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டு இருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வயலோகம் பகுதியில் மாணவர்களுக்கு அடுத்தடுத்து மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் மிகவும் அச்சத்தில் இருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோ செய்தியை புதிய தலைமுறை செய்தி நிறுவனம் வெளியிட்ட பிறகு, உரிய அதிகாரிகள் நேரடியாக சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து இருக்கிறார்கள். வயலோகம் ஊராட்சிக்குட்பட்ட கீழத்தெரு பகுதியில் கடந்த 5 நாட்களில்12 மாணவ, மாணவிகளுக்கு அடுத்தடுத்து மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டது. தகவல் அறிந்து சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அதில் கழிவு நீர் கலந்தது தெரியவந்தது. இந்த குடிநீரை குழந்தைகள் குடித்ததால்தான் அவர்களுக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டது. குறிப்பாக இந்த ஒரு நிகழ்வில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் கூறும் போது, அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார்கள்.


கடந்த மாதமே அதே கிராமத்தை சேர்ந்த ஏழு வயது சிறுவன் மஞ்சள் காமாலை நோயால் இதே ஒரு காரணத்திற்காக தான் உயிர் இழந்தான். அப்பொழுதே அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படி மாணவர்கள் பாதிக்கப்பட வேண்டிய அவசியம் இருந்திருக்காது. அது மட்டும் கிடையாது, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேட்டி கொடுப்பதையும், வாக்கிங் போவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறாரே தவிர மக்களை நேரடியாக சந்தித்து, அவர்களுடைய பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பாரா? என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News