அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம்:மே 12 இருதரப்பினர் பேச்சுவார்த்தை!

Update: 2025-05-10 16:06 GMT

மே 10 இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தத்தை அமல்படுத்த இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டதாக வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி அறிவித்துள்ளார் 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவத் துறை செயலாளர் நமது நாட்டு டி ஜி எம் ஓ வை பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கை காண இயக்குனர் ஜெனரல் மாலை 3: 35 மணியளவில் அழைத்து பேசினார் அப்பொழுது இன்று மாலை 5 மணி முதல் தரை வான் மற்றும் கடல் வழியாக அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் துப்பாக்கி சூட்டையும் நிறுத்திக் கொள்வது என இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர் 

இதுகுறித்து இரு தரப்பினரும் உரிய அறிவுரைகளை வழங்கி உள்ளது அதுமட்டுமின்றி இருநாட்டின் டிஜிஎம்ஓக்கள் வருகின்ற 12ஆம் தேதி நண்பகல் 12 மணி அளவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் என்று கூறியுள்ளார் 

Tags:    

Similar News