ரூ. 1.25 லட்சம் கோடியில் 3 செமிகண்டக்டர் ஆலைகள் - திறந்து வைத்தார் பிரதமர்!

Update: 2024-03-14 09:06 GMT

பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மற்றும் அசாம் மாநிலங்களில் ரூபாய் 1.25 லட்சம் கோடி மதிப்பிலான செமி கண்டக்டர் ஆலை அமைப்பதற்கான திட்டத்திற்கு காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டியுள்ளார். 

மேலும் இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகள் கலந்து கொண்டனர் அவர்கள் அனைவரிடம் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். 

அதாவது, இன்றைய தினம் வரலாற்றில் மிகவும் சிறப்பு மிக்க தினம் ஏனென்றால் ஒரு புதிய வரலாற்றை நாம் உருவாக்கி வருகிறோம். ரூ. 1.25 லட்சம் கோடி மதிப்பிலான மூன்று செமிகண்டக்டர் ஆலைகள் அமைப்பதற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த மூன்றில் இரண்டு குஜராத் மாநிலத்தில் சனந்த் மற்றும் தோலேரா இடத்திலும் ஒன்று அசாமில் மோரிகானிலும் அமைக்கப்பட உள்ளது. 

அதனால் உலக வரைபடத்தில் அசாம் மாநிலத்திற்கான முக்கியத்துவம் என்பது இனி அதிகரிக்கும். மேலும் இந்தியா செமிகண்டக்டர் உற்பத்தியில் உலகளாவிய மிகப்பெரிய முனையுமாக இந்த மூன்று ஆலைகளும் செயல்பாட்டிற்கு வரும் பொழுது உருவெடுக்கும். அதோடு நாம் நகர்ந்து கொண்டிருக்கும் 21 ஆம் நூற்றாண்டானது தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் காலமாகும் அதில் செமிகண்டக்டர் இல்லாத உலகத்தைப் பார்க்க முடியாது. தற்போது இந்தியா தற்சார்பு மற்றும் நவீனத்தை மின்னணு சிப்புகள் வடிவமைப்பின் மூலம் ஆற்றலுடன் முன் நகர்ந்து வருகிறது. 

இந்த செமிகண்டக்டர்கள் தான் தகவல் தொடர்பு முதல் போக்குவரத்து வரை அனைத்திற்கும் அடிப்படை ஆதாரமாகும், இந்த தொழிலில் உலகப் பொருளாதாரத்தில் பல பில்லியன் டாலர் வருவாய் ஈட்ட வழி வகுப்பதுடன் பெருமளவிலான வேலைவாய்ப்பையும் உருவாக்குகிறது. 

Source : The Hindu Tamil thisai 

Similar News