தமிழகத்தில் 1,27,000 கிராமங்கள் பெரும் சுத்தமான குடிநீர்: மாஸ் காட்டும் பிரதமரின் ஜல் சக்தி..!

Update: 2024-08-07 03:12 GMT

கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் மத்திய அரசு இணைந்து செயல்பட தொடங்கியது. 

இந்த திட்டம் தொடங்கப்படுவதற்கு முன்பு அதாவது 2018 ஆம் ஆண்டு நிலவரப்படி நாட்டின் மக்கள் தொகையில் 36 சதவிகித மக்களும் கிராமப்புற மக்கள் தொகையில் 44% மக்களும் வீடுகளில் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். ஆனால் இந்த திட்டம் அனைத்து கிராமப்புற பகுதிகளுக்கும், கிராம மக்களின் வீடுகளுக்கே குடிநீர் இணைப்பை வழங்கியது. 

இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் மட்டும் 2023 - 24 ஆண்டு 19.26 லட்சம் கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதோடு 1.25 கோடி கிராமப்புற வீடுகளில் 78.77 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இப்படி பிரதமர் மோடி கொண்டு வந்த ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் சுத்தமான குடிநீர் அனைத்து வீடுகளுக்கும் செல்வதால் வயிற்றுப்போக்கு நோய்கள் சார்ந்த நான்கு லட்சம் மரணங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. அதோடு இதனால் 8 லட்சம் கோடி ரூபாய் செலவு மிச்சமாகி உள்ளது என்று இந்தத் திட்டத்தை உற்று நோக்கி வந்த உலக சுகாதார நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு அறிக்கையாக சமர்ப்பித்துள்ளது. 

அதுமட்டுமின்றி கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் வழி குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல்ஜீவன் திட்டம் திறம்பட செயல்படுவதால் கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரம் உடல் அளவிலும், மனதளவிலும், பொருளாதார அளவிலும் மேம்பட்டு உள்ளது என்று உலக சுகாதார நிறுவனமே ஜல்ஜீவன் திட்டத்தை பாராட்டியுள்ளது. 

மத்திய அரசின் இடைவிடாத முயற்சிகளின் விளைவாக, நாட்டில் உள்ள 9.15 இலட்சம் (88.73%) பள்ளிகள் மற்றும் 9.52 இலட்சம் (84.69%) அங்கன்வாடி மையங்களில் குழாய் நீர் வழங்குவதை இந்த திட்டம் உறுதி செய்துள்ளது. அதுமட்டுமின்றி கடந்த திங்கட்கிழமை அன்று நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி நிலவரப்படி 1,27,000 மேற்பட்ட கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்று ஜல் சக்தி அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில், நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் நீர் இணைப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஜல் ஜீவன் மிஷன் கீழ் வழங்கப்படும் தண்ணீரின் தரம் மேம்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் ஆர்சனிக் மற்றும் ஃவுளூரைடு பாதிப்புக்குள்ளான கிராமப்புற குடியிருப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அமைச்சகம் வழங்கிய தரவுகள் தெரிவிக்கின்றன. 

Tags:    

Similar News