டெல்லி சட்டசபை தேர்தலில் 13 சதவீதம் உயர்ந்து உச்சத்தில் நிற்கும் பாஜக வாக்கு வங்கி !
டெல்லி சட்டசபை தேர்தலில் 80 சதவீத வேட்பாளர்களின் டெபாசிட் பறிபோனது. பாஜகவின் வாக்கு வங்கி 10 ஆண்டுகளில் 13 சதவீதம் உயர்ந்தது.
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. மொத்தம் 699 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் 55 பேர் அதாவது 80 சதவீதம் பேர் டெபாசிட் இழந்தனர். செல்லத்தக்க மொத்த ஓட்டுகளில் ஆறில் ஒரு பங்கு ஓட்டுகளை பெறாவிட்டால் டெபாசிட் பறிபோகும் .டெபாசிட்டை பறிகொடுத்தவர்களில் காங்கிரஸ் கட்சியினர் 67 வேட்பாளர்களும் அடங்குவர். மொத்தமுள்ள 70 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை நிறுத்தியது .ஆனால் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை .அபிஷேக் தத், ரோகித் சவுத்ரி, தேவேந்திர யாதவ் ஆகிய மூன்று காங்கிரஸ் வேட்பாளர்கள் மட்டுமே டெபாசிட் தக்க வைத்தனர் .
பா.ஜனதா கடந்த 2020 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 38.51% வாக்குகளும் 2015 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 32.3% வாக்குகளும் பெற்றது. எனவே பத்து ஆண்டுகளில் அதன் வாக்கு சதவீதம் 13 சதவீதம் உயர்ந்துள்ளது . ஆம் ஆத்மி 2020 ஆம் ஆண்டு தேர்தலில் 53.57 சதவீத வாக்குகளும் 2015 ஆம் ஆண்டு தேர்தலில் 54.5% வாக்குகளும் பெற்றது. எனவே 10 ஆண்டுகளில் 16 சதவீத வாக்குகளை இழந்துள்ளது. 40 சதவீதத்துக்கு மேல் ஓட்டுகள் பெறும் ஒரு கட்சி ஆட்சியை இழந்தது இதுவே முதல் முறை என்று கருதப்படுகிறது .அதே சமயத்தில் காங்கிரஸ் கட்சி 6.34% வாக்குகள் பெற்றது. கடந்த 2020 ஆம் ஆண்டு தேர்தலில் பெற்ற 4.3 சதவீதத்தை விட இது 2.1 சதவீதம் அதிகம் என்பது அக்கட்சிக்கு கிடைத்த ஒரே ஆறுதல் ஆகும்.