கனடாவில் அடுத்தடுத்து இந்து கோயில்கள் சூறை!

Update: 2022-02-09 04:37 GMT

கனடாவில் இந்தியர்கள் ஏராளமானோர்கள் வசித்து வருகின்றனர். அது போன்று அங்குள்ள அனைத்து இந்துக்களும் வழிப்படுவதற்காக பல்வேறு கோயில்களை கட்டியுள்ளனர். ஆனால் தற்போது கனடாவில் உள்ள மிஷனரிகள் இந்து கோயில்களை சூறையாடி வரும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

கனடாவில் உள்ள பிராம்ப்டன் பகுதியில் கடந்த மாதம் ஆஞ்சநேயர் கோயிலை சில மிஷனரிகள் சூறையாடினர். அந்த சம்பவத்திற்கு பின்னர் மீண்டும் அம்மன் கோயில், சிவன் கோயில், ஜெகன் நாதர் கோயில் என அடுத்தடுத்து சூறையாடப்பட்டு வருகிறது. மேலும், கடந்த 30ம் தேதி மிசிசவுகா என்ற இடத்தில் அமைந்துள்ள இந்து கலாசார மையத்தில் நள்ளிரவு நேரத்தில் இரண்டு பேர் அத்துமீறி நுழைந்துள்ளனர். உள்ளே வைத்திருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றது மட்டுமின்றி கோயிலையும் சூறையாடியுள்ளனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் முகமூடி அணிந்து இருப்பவர்களை சரியாக அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். தொடர்ந்து கனடாவில் கோயில்கள் சூறையாடப்பட்டு வருவது அந்நாட்டில் பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தால் அங்குள்ள இந்துக்களும், அர்ச்சகர்களும் பெரும் அச்சத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏற்கனவே கனடாவில் தடுப்பூசிக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது இந்து கோயில்கள் சூறையாடப்பட்டு வருவதால் அனைத்து கோயில் முன்பாகவும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Source: Dinamalar

Image Courtesy: Travel Triangle

Tags:    

Similar News