உக்ரைனில் இந்திய மாணவர்கள் பிணைக் கைதிகளாக இல்லை!

Update: 2022-03-03 12:02 GMT
உக்ரைனில் இந்திய மாணவர்கள் பிணைக் கைதிகளாக இல்லை!

உக்ரைனில் இந்திய மாணவர்கள் யாரும் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கவில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.

இது பற்றி மத்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியிருப்பதாவது: உக்ரைனில் இந்திய மாணவர்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருப்பதாக எவ்வித தகவலும் இல்லை. மேலும், கார்கிவ் மற்றும் அதன் அண்டை நகரங்களில் இருந்து வெளியேறுவதற்கு ரயில் மற்றும் பேருந்துகளை இயக்க உக்ரைன் அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம்.

அங்குள்ள இந்திய தூதர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். அந்நாட்டு அதிகாரிகளுடன் ஒத்துழைப்போடு இந்திய மாணவர்கள் கார்கிவ் நகரத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Source: Dinamalar

Image Courtesy: NDTV

Tags:    

Similar News