தேர்தல் விதிமீறல் தொடர்பாக 1,383 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - தமிழகத் தேர்தல் அதிகாரி! சிவிஜில் செயலி!

Update: 2024-03-29 11:33 GMT

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கான நடவடிக்கைகள் அனைத்தும் தீவிர படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தேர்தல் காலங்களில் ஏதேனும் புகார்களை தேர்தல் வேட்பாளர்கள் அல்லது தேர்தல் சார்ந்த புகார்களை தெரிவிப்பதற்கு சி விஜில் என்ற செயலியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியிருந்தது. 

அதன்படி அந்த செயலியின் மூலம் இதுவரை 1,383 புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். 

 அதாவது உரிமம் பெற்ற துப்பாக்கிகள் தமிழகத்தைச் சேர்ந்த 21,229 பேரிடம் உள்ளது, ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்டால் அதனை அருகில் உள்ள காவல் நிலையங்களில் அவர்கள் ஒப்படைக்க வேண்டும் இருப்பினும் இவர்களின் இதுவரை 568 பேர் ஒப்படைக்கவில்லை! முன்னதாக இதற்கு அவர்கள் வெளிநாடுகளிலும் அல்லது வேறு காரணங்களும் இருக்கலாம். நடத்தை விதிமீறல்கள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான புகார்களை சி விஜில் என்ற செயலி மூலம் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம்.

 மேலும் அவர்கள் நிகழ நேர வீடியோ மற்றும் புகைப்படத்தை அனுப்பியும் புகார் அளிக்கலாம் அந்த ஆதாரங்களின் அடிப்படையில் நூறு நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அதோடு இந்த செயலி மூலம் இதுவரை 1,383 புகார்கள் பெறப்பட்டு அவற்றின் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர்கள் மத்தியில் பேசிய தமிழக தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார். 

Source : The Hindu Tamil thisai 

Similar News