கோஷ்டி பிரச்சனையில் அடித்துக் கொள்ளும் கர்நாடகா காங்கிரஸ் அரசு!!
கர்நாடகாவில் முதல்வர் மாற்றத்திற்கான மோதல்கள் நடந்து வரும் நிலையில் டி.கே.சிவகுமாரின் ஆதரவு எம்எல்ஏக்கள் காங்கிரசின் தலைமைக்கு அழுத்தம் கொடுப்பதற்காக டெல்லிக்கு சென்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு பதவிக்காலம் பாதி கடந்த நிலையில் துணை முதல்வர் டி.கே. சிவகுமாரை செல்வராக வேண்டும் என அவரின் ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து சிவகுமாரை முதலமைச்சராக வேண்டும் என்று அவரின் ஆதரவு எம் எல் ஏக்கள் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் பொதுச் செயலாளரை சந்தித்து கோரிக்கைகளை முன் வைப்பதற்கு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து எம்எல்ஏக்கள் டெல்லிக்கு சென்றதைத் தொடர்ந்து சிவக்குமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ், சித்தராமையா தனக்கு ஒரு வாக்குறுதி அளித்து இருப்பதாகவும், அதனை அவர் காப்பாற்றுவார் என்றும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த வதந்திகளை நிராகரித்து சித்தராமையா தன்னுடைய பதவியை தொடருவேன் என்றும், வரும் மார்ச் மாதம் திட்டமிடப்பட்டுள்ள மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து சிவக்குமார் 140 காங்கிரஸ் எம்எல்ஏ.க்களும் என்னுடைய எம்.எல்.ஏக்கள் என்று கூறியுள்ளார். இதை பார்க்கும் பொழுது முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகிய இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வருவதாக தெரிகிறது. மேலும் 140 எம்எல்ஏக்களும் தன்னுடையவர்கள் என்று சிவக்குமார் மறைமுகமாக கூறி இருப்பதாக சில தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.