அடுக்குமாடி குடியிருப்புவாசிகளின் 'பார்க்கிங்' வசதிக்காக சிவன் கோயில் இடிப்பு! "ஓம் நமச்சிவாய" என்று கூறி பக்தர்கள் அழுகை!

Update: 2022-08-05 01:42 GMT

கோவை: 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயில் இடிக்கப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், பல்வேறு காரணங்களை கூறி இந்து ஆலயங்கள் அகற்றப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இச் சம்பவங்களால் தமிழக இந்துக்கள் மன வேதனைக்குள்ளாகியுள்ளனர்.

இதன் வரிசையில், கோவை அவினாசி சாலையில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயில் ஒன்று உள்ளது. அக்கோயிலுக்கு அன்றாடம் அப்பகுதி மக்கள் பலர் இறைவனை தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் கோவிலின் அருகே உள்ள, அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளின் கார்களை 'பார்க்' செய்வதற்கு ஏதுவாக,  'சிவன் கோயிலை இடிக்க வேண்டும்' என புகார் அளிக்கப்பட்டது. இது குறித்த வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்றது. கோயில் சார்பாக யாரும் ஆஜர் ஆகாத நிலையில், அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் உடனடியாக காவல்துறை உதவியுடன், மாநகராட்சி அதிகாரிகள் 'புல்டோசர்' இயந்திரத்தைக் கொண்டு கோவிலை இடித்தனர்.

இச்செய்தியை அறிந்த அக்கோயிலின் பக்தர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கோயில் இடிக்கப்படும் காட்சிகளை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

"ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய" என்று பெண்கள் பலர் கதறி அழுது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின் தற்காலிகமாக கோவில் இடிப்பு பணி நிறுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.

News j

Tags:    

Similar News