கி.பி 1500 ஆம் ஆண்டு பழமையான சிலை கண்டுபிடிப்பு.. பின்னணியில் உள்ள அரிகண்ட நிகழ்வு..

Update: 2024-06-08 10:31 GMT

வரலாற்று ஆய்வாளர்கள் சங்ககாலத்தை சேர்ந்த தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர்கள், தமிழர் தொன்மம் வரலாற்று அமைப்பின் வெற்றி தமிழன் ஆகியோர் சுமார் கி.பி 1500 ஆம் ஆண்டு பழமையான சிலையை கண்டுபிடித்து இருக்கிறார்கள். குறிப்பாக இந்த சிலையானது செங்கல்பட்டு மாவட்டம் பாலாறு பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்ட பொழுது இந்த சிலை கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது . பாலாறு ரயில் நிலையம் அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு அருகே சாலையில் மண்ணில் புதைந்த நிலையில் இருந்த அரிகண்ட சிலையைக் கண்டுபிடித்தனர். மேலும் இதை கண்டுபிடித்தவர்கள் தொடர்ந்து இதை ஆய்வு செய்தார்கள்.


இந்த சிலை 3.5 உயரம் கொண்டதாகவும் முழு சிலையின் பின்தலை பகுதியில் இடது பக்கமாக வளைந்த கொண்டை, கழுத்தில் ஆபரணங்கள், இடையில் சன்னவீரம் மற்றும் ஆடை ஆகியவற்றை அணிந்தபடியும் நின்ற கோலத்தில் காணப்பட்டது. மேலும் வலது கையில் உள்ள குறு வாளால் தனது தலையை வெட்டிக் கொள்வது போலவும், இடது கையில் உள்ள குறு வாள் பூமியை நோக்கி தாங்கியபடியும் இருந்தது. இது கி.பி 1500 காலகட்டத்தில் எழுச்சியடைந்த விஜயநகரப் பேரரசு கால சிலையாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கணித்து உள்ளார்கள்.


அக்கால சமூகத்தில் உயர்ந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் நோய் வாய்ப்படும் பொழுது அல்லது போரில் வெற்றி பெற வேண்டி ஊர்மக்கள் முன்னிலையில் இதுபோன்ற தன்னுயிர் நீக்கும் அரிகண்ட நிகழ்வு நடைபெறும். இவ்வாறு இந்த அரிய கண்ட நிகழ்வில் பங்கேற்று உயிர்க் கொடையளிக்கும் வீரனின் குடும்பத்துக்காக அந்த பகுதிக்கு உட்பட்ட சிற்றரசர்கள் விளைநிலங்களையும் ஆடு மாடுகளையும் தானமாக வழங்கி கௌரவிப்பார்கள். 

Input & Image courtesy: News

Tags:    

Similar News