வார்த்தையை விட்ட சல்மான்கான்!! முத்திரை குத்திய பாக்கிஸ்தான்!!

By :  G Pradeep
Update: 2025-10-27 10:09 GMT

சமீபத்தில் இந்தி நடிகர்​களான சல்​மான் கான், ஷாருக் கான், அமீர் கான் போன்றோர் சவுதி அரேபியாவில் ரியாத் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகரான சல்மான்கான் பேசியதை தொடர்ந்து அவரை பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டி உள்ளது. 

அதாவது நிகழ்ச்சியில் சல்மான் கான், இப்போது ஹிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற திரைப்படங்களை வெளியிட்டால் அவை 100 கோடிக்கும் மேல் வசூல் ஆகும். ஏனென்றால் இங்கு ஆப்கானிஸ்தான், பலுசிஸ்தான், பாகிஸ்தான் போன்ற பல நாடுகளை சேர்ந்த மக்கள் பணிபுரிந்து வருகின்றனர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அரசு பலுசிஸ்​தான் என்பது பாகிஸ்தானில் இருக்கும் ஒரு பகுதி என்றும், சல்மான் கான் பேசும் பொழுது பலுசிஸ்​தானை ஒரு நாடு போல் பிரித்து பேசியது இந்த நாட்டு மக்கள் தனி நாடு கோரிக்கை கேட்பதை சல்மான் கான் ஆதரிப்பது போன்றதாக உள்ளது என்று கோபத்தை வெளிக்காட்டியுள்ளது. 

இதைத்தொடர்ந்து கடந்த 16ஆம் தேதி பாகிஸ்தான் அரசு வெளியிட்ட அறிக்கையில், பிரபல நடிகர் சல்மான்கான் பலுசிஸ்தான் பிரிவினை ஆதரிப்பதாக தெரிகிறது. அதனால் அவரை தீவிரவாத எதிர்ப்பு சட்டம் 1997ல் நான்காவது அட்டவணையின் கீழ் கண்காணிக்கப்படும் நபரில் ஒருவராக உள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News