ஆகஸ்ட் 16 இல் விண்ணில் பாயபோகும் எஸ்.எஸ்.எல்.வி.- டி3: சந்திரயான் 3, ஆதித்யா எல் 1 வரிசையில் இ.ஓ.எஸ் - 08

Update: 2024-08-12 16:22 GMT

ஒட்டு மொத்த உலக நாடுகளையும் இந்தியா பக்கம் திருப்பி, இந்தியா மீது அந்த நாடுகள் கொண்டிருந்த பார்வையை முற்றிலுமாக மாற்றிய சாதனை நிலவின் தென் துருவத்தில் இந்தியா காலடி பதித்தது. அதாவது கடந்த 2023 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 23ஆம் தேதி இந்தியா படைத்த சாதனையை அமெரிக்கா, சோவியத் யூனியன், சீனா போன்ற நாடுகளையே வியக்க வைத்து திரும்பி பார்க்க வைத்தது. நிலவின் தென் துருவத்தில் இதுவரை எத்தனையோ நாடுகள் கால் பதிக்க முயற்சித்தும் அவற்றை முறியடித்து முதல் நாடாக இந்தியா சந்திரயான் 3 மூலம் தடம் பதித்தது. சந்திரயான் மூன்று விண்கலத்திலிருந்து பிரிந்த விக்ரம் லாண்டர் நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கி, விக்ரம் லாண்டரில் இருந்த பிரக்யாண்ரோவரும் வெற்றிகரமாக வெளியே வந்து ஆய்வுகளை தொடங்கியது.


இதனை அடுத்து விக்ரம் லாண்டர் வெற்றிகரமாக தரை இறங்கியதை குறிக்கும் வகையில் ஆகஸ்ட் 23ஆம் தேதி தேசிய விண்வெளி தினமாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனை அடுத்து ஆதித்யா எல் ஒன் என்ற செயற்கைக்கோளையும் இந்தியா அனுப்பி அதிலும் பல சாதனைகளை புரிந்து வருகிறது. இதற்கிடையிலே அமெரிக்கா, ரஷ்யா, சீனா என பல நாடுகளின் நிலவிற்கு தனது செயற்கைக் கோள்களை அனுப்பியும் கண்டுபிடிக்காத சல்பரை அப்பகுதியில் தனது செயற்கைக்கோளை இந்தியா நிலை நிறுத்தி கண்டறிந்து மற்றுமொரு சாதனையையும் புரிந்தது. 


இப்படி இந்திய விண்வெளித் துறை உலக நாடுகளுக்கு மத்தியில் இந்தியாவின் பார்வையை உயர்த்திக் கொண்டு செல்கிற நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 16 ஆம் தேதி மற்றுமொரு செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அதாவது புவி கண்காணிப்பு செயல்பாட்டிற்காக 175 கிலோ எடை கொண்ட அதிநவீன இ.ஓ.எஸ் - 08 என்ற செயற்கைக்கோளை இந்தியா வடிவமைத்துள்ளது இந்த செயற்கைக்கோள் சிறிய ரக எஸ்.எஸ்.எல்.வி - டி3 ராக்கெட் மூலம் வருகின்ற ஆகஸ்ட் 16 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டா ஏவு தளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டு ஆயுட்காலத்தை கொண்ட இந்த செயற்கைக்கோளில் எலக்ட்ரோ ஆப்டிகல் இன்ஃப்ராரெட் பேலோடு, குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் - ஜி.என்.எஸ்.எஸ் - ஆர் மற்றும் எஸ்.ஐ.சி.யுவி டோஸி மீட்டர் ஆகிய மூன்று ஆய்வு கருவிகளும் இதில இடம் பெற்றுள்ளது. இது மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்ட விண்கலத்திலும் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது. 


மேலும் இந்த செயற்கைக்கோள் அடிப்படையான கண்காணிப்பு, பேரிடர் கண்காணிப்பு சுற்றுச்சூழல் கண்காணிப்பு, எரிமலை செயல்பாட்டின் கண்காணிப்பு போன்ற பலவற்றை கண்காணிப்பதே இந்த செயற்கைக்கோளின் செயல்பாடாகவும் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News