கே.என். நேருக்கு செக் வைத்த பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை!! இதுதான் விஷயமா?

By :  G Pradeep
Update: 2025-12-14 15:05 GMT

கே.என். நேரு சார்ந்த தொழில்களில் தொடர்ந்து முறைகேடுகள் நடந்து வருகின்றன என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். மேலும் 88 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் தொடர்பாக DGP அவர்களுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. 

1,020 கோடி ரூபாய் ஊழல் நடந்ததற்கான ஆதாரங்களை இணைத்துக் கொடுத்துள்ளனர். குறிப்பாக, அந்தத் துறையிலுள்ள ஒப்பந்தக்காரர்கள், ஒப்பந்தத் தொகையிலிருந்து 7.5% முதல் 10% வரை லஞ்சமாக கே.என்.நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு கொடுக்க வேண்டியிருப்பதாக, முழு விவரத்துடன் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த படியாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேர்முகத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளனர். எந்த அடிப்படையில் இந்த பட்டியலை தயார் செய்தனர் என்பது தெரியவில்லை.

வாக்காளர் பட்டியல் தொடர்பாகப் பேசிய அண்ணாமலை, எஸ்.ஐ.ஆர். படிவம் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய நிலையில் தேர்தல் ஆணையத்தின் அறிக்கையின்படி, 77 லட்சம் வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என கூறினார். 

Tags:    

Similar News