ஸ்மார்ட் போன் ஏற்றுமதியில் அசுர வளர்ச்சியை அடைந்த இந்தியா: 167வது இடத்திலிருந்து 2வது பெரிய இடத்திற்கு முன்னேற்றம்!

Update: 2025-02-14 16:35 GMT

2025 ஜனவரியில் ஸ்மார்ட் ஃபோன்களின் ஏற்றுமதி ரூபாய் 25,000 கோடியை தாண்டி உள்ளது இது 2024 ஜனவரியில் நிகழ்ந்த ஏற்றுமதிகளை விட 140 சதவீதம் அதிகமாகும் அப்பொழுது இந்தியா ஸ்மார்ட் போன் ஏற்றுமதியில் 1.31 பில்லியன் டாலர்களை பதிவு செய்தது 

முன்னதாக 2024-2025 ஆம் ஆண்டில் ஸ்மார்ட் போன் ஏற்றுமதி 2.25 ட்ரில்லியன்களை எட்டும் என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அஸ்வினி வைஷ்ணவி சமீபத்தில் தனது சமூக வலையதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் பிஎல்ஐ திட்டம் ஆப்பிள் போன்ற உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளை இந்தியாவிற்கு விற்பனை சங்கிலிகளாக மாற்ற வழிவகுத்தது இதனால் அவற்றின் விற்பனையாளர்கள் நாட்டின் மிகப்பெரிய தொழிற்சாலைகளில் சிலவற்றை நிறுவியுள்ளனர் ஏற்றுமதி எண்ணிக்கை அன்றிலிருந்து உயர்ந்துள்ளது

2021 ஆம் நிதியாண்டில் 3.1 பில்லியன் டாலரை எட்டிய ஸ்மார்ட்போன்களின் ஏற்றுமதி 2021-2022 இல் 5.8 பில்லியனாக இரட்டிப்பானது இதுவும் 2022-2023 இல் 11.1 பில்லியனாக ஏற்றுமதி உயர்ந்தது மேலும் 2024 ஆம் நிதியாண்டில் இது 15.6 பில்லியன் ஆக உயர்ந்தது 

சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு அதாவது 2014-15 ஆம் ஆண்டில் ஹார்மோனைட் சிஸ்டம் மூலம் இந்தியாவின் ஏற்றுமதியில் ஸ்மார்ட் ஃபோன்கள் ஏற்றுமதி 167 வது இடத்தில் இருந்தது ஆனால் இதுவே 2024 டிசம்பரில் இரண்டாவது பெரிய இடத்திற்கு இந்தியாவின் ஏற்றுமதியில் ஸ்மார்ட்போன்களின் ஏற்றுமதி உயர்ந்துள்ளது 

Tags:    

Similar News