வறுமையிலிருந்து மீட்கப்பட்ட 17.1 கோடி மக்கள்,2.3 சதவீதமாக குறைந்த இந்தியாவின் வறுமை!உலக வங்கி அறிக்கை!
உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவில் தீவிர வறுமை 2011–12ல் 16.2% ஆக இருந்தது, 2022–23ல் வெறும் 2.3% ஆகக் குறைந்துள்ளது. வலுவான சீர்திருத்தங்கள், விரிவடையும் வேலைகள் மற்றும் சிறந்த சமூக உள்கட்டமைப்பு ஆகியவற்றால், மில்லியன் கணக்கான மக்கள் வறுமைக் கோட்டுகளுக்கு மேல் உயர்ந்து வருகின்றனர் என உலக வங்கி அறிவித்துள்ளது
இதன் மூலம் 17.1 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் மேலும் கிராமப்புற தீவிர வறுமை 18.4 சதவீதத்திலிருந்து 2.8 சதவீதமாகவும், நகர்ப்புறம் 10.7 சதவீதத்திலிருந்து 1.1 சதவீதமாகவும் குறைந்துள்ளது என்றும், இதனால் கிராமப்புற-நகர்ப்புற இடைவெளி 7.7 சதவீதத்திலிருந்து 1.7 சதவீத புள்ளிகளாகக் குறைந்துள்ளது இது 16 சதவீத ஆண்டு சரிவு என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது