தமிழகத்தில் கடந்த ஆண்டு 175 மாணவர்களுக்கு 1.04 கோடி உதவித் தொகை செய்து அசத்திய மத்திய அரசு!
கடந்த ஆண்டு தமிழகத்தில் 175 மாணவர்களுக்கு ரூபாய் 1.04 கோடி உதவித் தொகை செய்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மாணவர்கள் தரமான கல்வி பெறுவதை உறுதி செய்வதற்காக பல்வேறு திட்டங்கள் மூலமாக மத்திய மாநில அரசுகள் உதவி செய்து வருகின்றன. அந்த பகுதியில் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை நாடு முழுவதும் உயர் கல்வி படிக்க மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கி வருகிறது.கடந்த 2023 - 24 ஆம் ஆண்டு மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை 36 ஆயிரத்து 754 மாணவர்களுக்கு உதவி தொகையாக ரூபாய் 25.19 கோடி வழங்கி இருக்கிறது.
இதில் அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 12,563 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர் இதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தானில் 945 பேரும் மேற்கு வங்காளத்தில் 2,429 பேரும் பயன் அடைந்திருக்கிறார்கள். தமிழகத்தை பொறுத்த மட்டும் 175 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். அவர்களுக்கு 1.04 கோடி உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022-23 ஆம் ஆண்டில் தமிழகத்தைச் சேர்ந்த 104 மாணவர்கள் உதவி தொகையாக 67 லட்சம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.