மோசடி கணக்குகளை கண்டறிய ரிசர்வ் வங்கி கண்டுபிடித்த புதிய ஏஐ தொழில்நுட்பம்! இதுவரை பிடிபட்டது 19 லட்சம் மோசடி கணக்குகள்!

11 பிப்ரவரி 2025 டெல்லியில் இணை பாதுகாப்பு குறித்தும் இணைய மோசடி குறித்தும் ஆலோசனை மேற்கொள்ள உள்துறை அமைச்சகத்திற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அதில் தலைமை தாங்கி பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் இதுவரை 1,43,000 க்கும் அதிகமான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது அதுமட்டுமின்றி இந்த புகார்களை அடிப்படையாக வைத்து 805 செயல்களும் 3266 வலைத்தள இணைப்புகளும் தடை செய்யப்பட்டுள்ளது
அதுமட்டுமின்றி இதில் 19 லட்சத்திற்கும் அதிகமான மோசடி கணக்குகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மேலும் கருப்பு பணத்தை நல்ல பணமாக்கப் பயன்படுத்தப்படும் வங்கி கணக்குகளையும் அடையாளம் கண்டு அவற்றை தொடக்கத்திலேயே முடக்குவதற்கும் செயற்கை நுண்ணறிவு உதவுகிறது
இதற்காக தான் ரிசர்வ் வங்கியின் புத்தாக்க மையம் மியூல்ஹன்டர் ஏஐ என்று செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் மோசடி கணக்குகளை அடையாளம் காண உதவுகிறது