நேரடி வரி வசூல் ரூ. 19.58 லட்சம் கோடி.. கடந்த ஆண்டு விட 18 சதவீதம் அதிகரிப்பு..
2023-24 நிதியாண்டிற்கான நேரடி வரி வசூலின் தற்காலிக புள்ளிவிவரங்கள், முந்தைய நிதியாண்டில் அதாவது 2022-23 நிதியாண்டில் வசூலான ரூ .16.64 லட்சம் கோடியுடன் ஒப்பிடும்போது நிகர வசூல் ரூ .19.58 லட்சம் கோடியாக உள்ளது, இது 17.70% அதிகரிப்பைக் குறிக்கிறது. 2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நேரடி வரி வருவாய்க்கான பட்ஜெட் மதிப்பீடுகள் ரூ.18.23 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டு, அவை திருத்தப்பட்டு, திருத்தப்பட்ட மதிப்பீடுகள் ரூ.19.45 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. தற்காலிக நேரடி வரி வசூல்பட்ஜெட் மதிப்பீட்டை விட 7.40% மற்றும் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் 0.67% அதிகரித்துள்ளது.
2023-24 நிதியாண்டிற்கான நேரடி வரிகளின் மொத்த வசூல் 2022-23 நிதியாண்டில் மொத்த வசூலான ரூ.19.72 லட்சம் கோடியைவிட 18.48% வளர்ச்சியைக் காட்டுகிறது. 2023-24 நிதியாண்டில் மொத்த கார்ப்பரேட் வரி வசூல் ரூ.11.32 லட்சம் கோடியாக உள்ளது மற்றும் முந்தைய ஆண்டின் மொத்த கார்ப்பரேட் வரி வசூலான ரூ.10 லட்சம் கோடியை விட 13.06% வளர்ச்சியைக் காட்டியுள்ளது. 2023-24 நிதியாண்டில் நிகர கார்ப்பரேட் வரிவசூல் ரூ.9.11 லட்சம் கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டின் நிகர கார்ப்பரேட் வரி வசூலான ரூ.8.26 லட்சம் கோடியை விட10.26% வளர்ச்சியைக் காட்டியுள்ளது.
2023-24 நிதியாண்டில் மொத்த தனிநபர் வருமான வரி வசூல் ரூ.12.01 லட்சம் கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் ரூ.9.67 லட்சம் கோடியாக இருந்த மொத்த தனிநபர் வருமான வரி வசூலை விட 24.26% வளர்ச்சியைக் காட்டியுள்ளது. 2023-24 நிதியாண்டில் நிகர தனிநபர் வருமான வரிவசூல் ரூ.10.44 லட்சம் கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் ரூ.8.33 லட்சம் கோடியாக இருந்த நிகர தனிநபர் வருமான வரி வசூலை விட 25.23% வளர்ச்சியைக் காட்டியுள்ளது. 2023-24 நிதியாண்டில் ரூ.3.79 லட்சம் கோடி ரீஃபண்ட் வழங்கப்பட்டுள்ளது, இது 2022-23 நிதியாண்டில் வழங்கப்பட்ட ரூ.3.09 லட்சம் கோடி ரீஃபண்டுகளை விட 22.74% அதிகமாகும்.
Input & Image courtesy: News