புகார் அளிக்க வந்தவரின் தாயை துஷ்பிரயோகம் செய்த தமிழக காவல்துறையினருக்கு ரூ2 லட்சம் இழப்பீட்டு உத்தரவை உறுதி செய்த உச்ச நீதிமன்றம்!
2013 ஆம் ஆண்டு ஒரு நபர் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையத்தை அணுகி ரூ13 லட்சம் மோசடி மற்றும் முறைகேடு குறித்து புகார் அளித்தார் ஆனால் போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்ய மறுத்துவிட்டனர் புகார்தாரர் பின்னர் தனது பெற்றோருடன் திரும்பி வந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியபோதும் அவர் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது மேலும் அவரது தாயார் இன்ஸ்பெக்டர் தாசனால் மோசமான துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாகக் கூறப்படுகிறது
இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்த பொழுது ஸ்ரீவில்லிபுத்தூரில் அன்றைய காவல் ஆய்வாளர் பவுல் யேசு தாசன் தாக்கல் செய்த மேல்முறையீட்டை நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது மேலும் பாதிக்கப்பட்டவருக்கு ரூ2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அந்த இழப்பீட்டை அதிகாரியிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்றும் ஆணையம் உத்தரவிட்டது
அதோடு ஒரு குற்றத்தைப் புகாரளிக்க காவல் நிலையத்திற்குச் செல்லும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் அது இந்திய அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் அவரது அடிப்படை உரிமை என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது