"தமிழகத்தில் தபால் ஓட்டில் 2ம் இடத்தை பிடித்த பாஜக"....ஆதரவு அளித்த அரசு ஊழியர்கள்!.
தமிழகத்தில் முதல்முறையாக தபால் ஓட்டு பதிவில் பாஜக கூட்டணி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
இந்த முறை தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மட்டுமின்றி 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களும், மாற்றுத்திறனாளிகளும் தபால் மூலம் ஓட்டளித்தனர். இதனால் மொத்த தபால் ஓட்டுகள் எண்ணிக்கை 3 லட்சம். பொதுவாக தபால் ஓட்டுகளில் இதுவரை திமுக முன்னிலை வகுத்துள்ளது. ஆனால் இந்த முறை திமுக மற்றும் அதிமுக போன்ற மற்ற கட்சிகளை விட பாஜக தபால் ஓட்டுகளின் முன்னிலை வகித்துள்ளது. அதிலும் குறிப்பாக தென் சென்னை மற்றும் தேனி தொகுதிகளில் பாஜக கூட்டணி தபால் ஓட்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது.
மொத்தம் பதிவான தபால் ஓட்டுகளில் திமுக கூட்டணிக்கு 1,11,150 ஓட்டுகளும், பாஜக கூட்டணிக்கு 62,707 ஓட்டுகளும், அதிமுக கூட்டணிக்கு 50,241 ஓட்டுகள் மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு 24,318 ஓட்டுகளும் கிடைத்துள்ளது. அதன்படி இதுவரை இல்லாத வகையில் தமிழகத்தில் தபால் ஓட்டுகளில் அதிக ஓட்டுகளை பெற்ற கட்சிகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் பாஜக கூட்டணி உள்ளது.
மேலும் தபால் ஓட்டுகளில் திமுக சரிவை கண்டதற்கு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை திமுக நிறைவேற்றாமல், அதனால் ஏற்பட்ட அதிருப்தியே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
Source : Dinamalar