மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியில் 2% உயர்த்திய மத்திய அரசு!பயனடையும் 48.66 லட்சம் ஊழியர்கள்!

Update: 2025-03-28 17:21 GMT
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியில் 2% உயர்த்திய மத்திய அரசு!பயனடையும் 48.66 லட்சம் ஊழியர்கள்!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 53 சதவீதம் அகவிலைப்படியாக பெற்று வருகின்றனர் இந்த நிலையில் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்ற விலைவாசி உயர்வை ஈடு செய்வதற்காக மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி நிவாரணத் தொகையை உயர்த்தி உள்ளது.

அதாவது மத்திய அரசு தன் பணியாளர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி நிவாரணத் தொகையை இரண்டு சதவீதம் உயர்த்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளிக்கின்றது

இப்படி மத்திய அரசு தன் ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணம் ஆகிய இரண்டையும் உயர்த்துவதனால் மத்திய அரசுக்கு ஒவ்வொரு ஆண்டிற்கும் 6,614.04 கோடி ரூபாய் கூடுதல் செலவு இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் இதன் மூலம் 48.66 லட்சம் மத்திய அரசு பணியாளர்களும் 66.55 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் 

Tags:    

Similar News