இந்தியா ஸ்கில்ஸ் 2024.. திறமைகளை நிரூபிக்க அற்புத வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த மோடி அரசு..

Update: 2024-05-15 13:52 GMT

இந்தியா ஸ்கில்ஸ் 2024 – நாட்டின் மிகப்பெரிய திறன் போட்டி –உயர்தரமான திறன்களை நிரூபிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 2024 மே 15 அன்று தொடங்குகிறது. புதுதில்லி, துவாரகாவில் உள்ள யஷோபூமியில் தொடக்க விழாவிற்கு திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இதில் 30 க்கும் அதிகமான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 900-க்கும் அதிகமான மாணவர்கள் மற்றும் 400-க்கும் அதிகமான தொழில்துறை வல்லுநர்கள் பங்கேற்பார்கள்.


நான்கு நாட்கள் நடைபெறும் இந்தியா ஸ்கில்ஸ் போட்டியில் பங்கேற்பாளர்கள் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் முதல் அதிநவீன தொழில்நுட்பங்கள் வரை 61 திறன்களில் தேசிய மேடையில் தங்களது மாறுபட்ட திறன்கள் மற்றும் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். 47 திறன் போட்டிகள் நேரடியாகவும், 14 கர்நாடகா, ஹரியானா, உத்தரப்பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் சிறந்த உள்கட்டமைப்பு கிடைப்பதை மனதில் கொண்டு இணையம் வழியாகவும் நடத்தப்படும். ட்ரோன்-திரைப்படத் தயாரிப்பு, ஜவுளி-நெசவு, தோல்-காலணிகள் தயாரிப்பு போன்ற 9 கண்காட்சி திறன்களிலும் மாணவர்கள் பங்கேற்பார்கள். இந்தியா ஸ்கில்ஸ் போட்டியின் வெற்றியாளர்கள், சிறந்த தொழில்துறை பயிற்சியாளர்களின் உதவியுடன், வரும் செப்டம்பர் மாதத்தில் பிரான்சின் லியோனில் நடைபெறவுள்ள உலகத் திறன்கள் போட்டிக்குத் தயாராவார்கள், இது 70-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1,500 போட்டியாளர்களை ஒருங்கிணைக்கும்.


ஸ்கில் இந்தியா டிஜிட்டல் மையம் போர்ட்டலில் சுமார் 2.5 லட்சம் வேட்பாளர்கள் போட்டிக்கு பதிவு செய்தனர். இவர்களில் 26,000 பேர் முதல்நிலை செயல்முறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநில மற்றும் மாவட்ட அளவிலான போட்டியை ஏற்பாடு செய்வதற்காக இந்தத் தரவு மாநிலங்களுடன் பகிரப்பட்டது. இவர்களில் 900-க்கும் அதிகமான மாணவர்கள் இந்தியா ஸ்கில்ஸ் தேசிய போட்டிக்கு பட்டியலிடப்பட்டனர்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News