மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக ஏழாவது முறையாக பட்ஜெட்டை என்ற தாக்கல் செய்கிறார்.
அதில், சர்வதேச பொருளாதாரம் மந்தமான நிலையில் இருப்பினும் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது என்றும், இந்தியாவின் பண வீக்கம் தொடர்ந்து குறைவாகவே உள்ளது என்றும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வேலைவாய்ப்பு மற்றும் கல்வித்திறன் மேம்பாட்டிற்காக ரூபாய் 1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு மற்றும் 80 கோடி மக்களுக்கு உணவு தானியம் வழங்கும் திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும், விவசாயத்துறையில் டிஜிட்டல் புரட்சி செய்வதற்கு 32 தோட்டக்கலைகளில் 109 வகையான அதிக மகசூல் தரும் பயிர்கள் அறிமுகம் மற்றும் வேளாண்மை துறைக்கு ரூபாய் 1.52 லட்சம் கோடி ஒதுக்கிடப்பட்டு மத்திய பட்ஜெட் 2024 தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் உள்நாட்டு கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பெற ரூபாய் பத்து லட்சம் வரையிலான கடனுக்கு அரசு நிதி உதவி அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
கிசான் கிரெடிட் கார்டுகள் ஐந்து மாநிலங்களில் முதல் கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு, காய்கறி உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து ஊக்குவிக்கப்படும் எனவும், உள்நாட்டு கல்வி நிலையங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலில் குறிப்பிட்டுள்ளார்.