பிரதமர் மோடியின் சீர்திருத்தப் பயணம்: 2025-ம் ஆண்டு முக்கிய அம்சங்கள்!!
பிரதமர் நரேந்திர மோடி, 2025-ம் ஆண்டு இந்தியாவின் சீர்திருத்தப் பயணத்தில் ஒரு திருப்புமுனையான காலகட்டமாக அமைந்தது என தெரிவித்துள்ளார். கடந்த 11 ஆண்டுகளில் அடைந்த முன்னேற்றங்களின் அடிப்படையில், சீர்திருத்தங்கள் ஒரு தொடர்ச்சியான தேசிய இயக்கமாக மாறிய ஆண்டாக 2025 நினைவுகூரப்படும் என அவர் கூறியுள்ளார்.
ஜிஎஸ்டி சீர்திருத்தம், வருமான வரி விலக்கு, நவீன வருமான வரிச்சட்டம், தொழிலாளர் சட்டங்கள், தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள், அணுசக்தி சட்டம் ஆகியவை 2025-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய சீர்திருத்தங்கள்.
விரைவான செயலாக்கம், ஆழமான மாற்றங்கள், எளிதாக்கப்பட்ட நிர்வாகம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவை இந்த ஆண்டு வலுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் தங்கள் ஈடுபாட்டை ஆழப்படுத்த வேண்டும் என முதலீட்டாளர்களை பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் வழிகாட்டும் நோக்கமாக தொடர்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.