மகாராஷ்டிரா அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம்:2025-26 கல்வியாண்டு முதல் நடைமுறைபடுத்த பாஜக அரசு முடிவு!

மகாராஷ்டிரா கல்வி அமைச்சர் தாதாஜி பூஸ் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் CBSE முறை மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 2025-26 கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்
மாநிலத்தில் 3 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கான தேசிய கல்விக் கொள்கை செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் CBSE இன் பாடத்திட்டத் திட்டத்தை வழிகாட்டுதல் குழு அங்கீகரித்துள்ளதா என்பதை ஆராய விரும்பிய சட்டமன்ற உறுப்பினர் பிரசாத் லாட் எழுப்பிய கேள்விக்கு மாநில கல்வி வாரியங்களால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளுக்கு CBSE பாடத்திட்டத்தை செயல்படுத்த கல்வித் துறை அறிவுப்புகளை பிறப்பித்துள்ளதாக அமைச்சர் சட்டமன்றத்தில் தெரிவித்தார்
மேலும் சிபிஎஸ்இ முறை 2025-2026 கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்படும் அதோடு மாநிலத்தில் மாணவர்களின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது என்று கூறினார்
பள்ளிக் கல்வித் துறை தொடர்பான மாநில பாடத்திட்ட கட்டமைப்பை வழிகாட்டுதல் குழு அங்கீகரித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது அடுத்த 100 நாட்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உட்பட அனைத்துத் துறைகளின் பணிகளையும் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆய்வு செய்தார் அதன்படி பள்ளிக் கல்வியில் மகாராஷ்டிரா மீண்டும் முன்னணிக்கு வரும் என்று பள்ளிக் கல்வித் துறையின் கூட்டத்தில் நம்பிக்கை தெரிவித்திருந்தார்
தரமான கல்வியை வழங்க கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டார் மாநில அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ முறையை ஏற்றுக்கொள்வது குறித்தும் தேவையான மாற்றங்களைச் செய்வது குறித்தும் பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது