வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2025-ஐ தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி:ரூ4.25 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்க இலக்கு!
பிரதமர் நரேந்திர மோடி, இன்று புதுதில்லியின் பாரத் மண்டபத்தில் எழுச்சி பெறும் வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2025-ஐ தொடங்கி வைத்தார். இந்த நிகழ்விற்கு வருகை தந்த அனைத்து பிரமுகர்களையும் அன்புடன் வரவேற்ற பிரதமர், வடகிழக்கு பிராந்தியத்தின் எதிர்காலம் குறித்து மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்தினார். பாரத் மண்டபத்தில் சமீபத்தில் நடைபெற்ற அஷ்டலட்சுமி மஹோத்சவத்தை நினைவு கூர்ந்த அவர், இன்றைய நிகழ்வு வடகிழக்கில் முதலீட்டின் கொண்டாட்டத்தைக் குறிக்கிறது என்பதை சுட்டிக் காட்டினார். இந்த உச்சிமாநாட்டிற்கு தொழில்துறை தலைவர்களின் குறிப்பிடத்தக்க வருகையை பிரதமர் எடுத்துரைத்தார். இந்தப் பிராந்தியத்தில் உள்ள வாய்ப்புகளையும் அவர் சுட்டிக் காட்டினார்.
அனைத்து அமைச்சகங்களுக்கும் மாநில அரசுகளுக்கும் அவர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து, ஒரு செழிப்பான முதலீட்டுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதில் அவர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளைப் பாராட்டினார். வடகிழக்குப் பிராந்தியத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும், செழிப்புக்குமான தமது உறுதிப்பாட்டை மீண்டும் எடுத்துரைத்தார்.
மேலும் பேசிய பிரதமர் நரேந்திர மோடி உலகின் மிகவும் பன்முகத்தன்மை கொண்ட நாடாக உள்ள இந்தியாவின் நிலையை சுட்டிக் காட்டிய திரு நரேந்திர மோடி, வடகிழக்குப் பகுதி மிகவும் பன்முகத்தன்மை கொண்ட பகுதி என்றார். வர்த்தகம், பாரம்பரியம், ஜவுளி, சுற்றுலா ஆகியவற்றில் இப்பிராநதியம் பரந்த ஆற்றலைக் கொண்டுள்ளதை அவர் எடுத்துரைத்தார். பிராந்தியத்தின் பன்முகத்தன்மை அதன் மிகப்பெரிய பலமாகும் என்று அவர் கூறினார். வடகிழக்குப் பகுதி ஒரு செழிப்பான உயிரிப் பொருளாதாரம், மூங்கில் தொழில், தேயிலை உற்பத்தி, பெட்ரோலியம், விளையாட்டு, திறன், சுற்றுச்சூழல் சுற்றுலா ஆகியவற்றுக்கான வளர்ந்து வரும் மையமாக உள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டார். இந்தப் பிராந்தியம் கரிம பொருட்களின் உற்பத்திக்கு வழி வகுத்து வருவதாகவும், ஆற்றலின் சக்தியாக இவை திகழ்கின்றன என்றும் குறிப்பிட்டார்.
அதோடு இன்று பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட உச்சி மாநாட்டில் ரூ.4.25 லட்சம் கோடி மதிப்புள்ள முதலீடுகளை ஈர்ப்பதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம் என மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்