உலக நன்மைக்கு முக்கிய அமைப்பான பிம்ஸ்டெக் அமைப்பை வலுப்படுத்த பிரதமர் மோடி 21 செயல் திட்டங்களை முன்மொழிந்தார்!
தாய்லாந்து சென்ற பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற ஆறாவது பிம்ஸ்டெக் உச்சி மாநாடு 21 அம்ச செயல் திட்டங்களை முன்மொழிந்து உரையாற்றியுள்ளார்
அதில் பேசிய பிரதமர் மோடி தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு இடையே ஒரு முக்கிய பாலமாக பிம்ஸ்டெக் செயல்பட்டு வருகிறது இதனால் மேலும் பிம்ஸ்டெக்கை வலுப்படுத்துவதற்கு அதன் நோக்கத்தை விரிவுபடுத்தி அதன் திறன்களை மேம்படுத்த வேண்டும் சைபர் குற்றம் சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் போதைப்பொருள் கடத்தல் பயங்கரவாதம் மற்றும் மனித கடத்தலுக்கு எதிரான போராட்டத்தில் இந்த மன்றம் முக்கிய பங்கு வகிக்க முடியும் இது தொடர்பான முதல் கூட்டத்தை இந்த வருடத்தின் பிற்பகுதியில் இந்தியா நடத்த வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன் என 21 அம்ச செயல்திட்டங்களை முன்மொழிந்துள்ளார்