உலகமே எதிர்பார்க்கிறது ராமர் கோவிலில் திறப்பு விழாவை! ஜன-22 யை தீபாவளி போன்று கொண்டாடுங்கள்! பிரதமர் உரை!
இன்று அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட விமான நிலையத்தையும், சுமார் 15,000 மதிப்புள்ள மக்கள் நலத்திட்டத்தையும் அயோத்தி சென்ற பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மக்களிடம் பிரதமர் மோடி கூறியது:
வளர்ச்சியின் புதிய உச்சத்தை உலகின் எந்த நாடு எட்ட வேண்டும் என்று நினைக்கிறதோ அது முதலில் தனது பாரம்பரியத்தை கவனிக்க வேண்டும். அப்படித்தான் நமது நாட்டின் வளர்ச்சியும் பாரம்பரியமும் நமது நாட்டை முன்னெடுத்துச் செல்கிறது, நம் நாட்டின் வரலாற்றிலே டிசம்பர் 30ஆம் தேதி என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தது ஏனென்றால் இதே நாளில் தான் 1943 ஆம் ஆண்டு நமது நேதாஜி இந்திய தேசிய கொடியை அந்தமான் தீவுகளில் ஏற்றி சுதந்திரத்தை பிரகடனமிட்டார்.
வரலாற்று நிகழ்வான ஜனவரி 22 ஆம் தேதியில் நடைபெற உள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவை உலக நாடுகளே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. மேலும் ராமர் கோவில் அயோத்தி கட்ட துவங்கிய உடனே ஏராளமான பக்தர்கள் அயோத்திக்கு வர ஆரம்பித்தனர் அவை அனைத்தையும் மனதில் கொண்டே பல வளர்ச்சி பணிகளை அயோத்தியில் துவங்கினோம், அதன் வரிசையிலே அயோத்தி விமான நிலையமும் ரயில் நிலையமும் புத்துயிர் பெற்றது. அதோடு ஜனவரி 22 ஆம் தேதி அன்று 140 கோடி மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் ராமஜோதி ஏற்றி அன்றைய தினம் தீபாவளி போன்று கொண்டாட வேண்டும் என்று கூறியுள்ளார்.
Source : Dinamalar