பிரதமரின் கவுரவ நிதி உதவி திட்டத்தில் தமிழகத்தில் 22 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயன்!
பிரதமரின் விவசாயிகளுக்கான கவுரவ நிதி உதவி திட்டத்தில் தமிழ்நாட்டில் 22 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறுகின்றனர் என மக்களவையில் மத்திய வேளாண்துறை இணையமைச்சர் ராம்நாத் தாக்கூர் தெரிவித்துள்ளார்
பிரதமரின் விவசாயிகளுக்கான கவுரவ நிதி உதவி திட்டம் 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.6,000 மூன்று சம தவணைகளாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 19 தவணை தொகைகள் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3 லட்சத்து 61 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 19-வது தவணைத் தொகையை 22 லட்சத்து 58 ஆயிரத்து 779 விவசாயிகள் பெற்றுள்ளனர் அவர்களுக்கு மொத்தம் 501 கோடியே 87 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது