மகாராஷ்டிராவில் ரூபாய் 23,300 கோடி மதிப்பில் பிரதமர் மோடி தலைமையில் ஏராளமான திட்டங்கள் தொடக்கம்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ரூபாய் 23,300 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

Update: 2024-10-06 17:00 GMT

பிரதமர் மோடி ஒரு நாள் சுற்றுப்பயணமாக நேற்று மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சென்றார். நாண்டெட் விமான நிலையத்திற்குச் சென்ற அவர் பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வாஷிங் பகுதிக்கு சென்றடைந்தார் .அங்குள்ள ஜகதாம்பா மாதா கோவிலில் தரிசனம் செய்த பின்னர் சந்த் சேவலால் மகாராஜ் மற்றும் சந்த் ராமராவ் மகாராஜ்ஆகியோரின் நினைவிடங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து பஞ்சாரா சமூகத்தினரின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் உருவாக்கப்பட்டிருந்த பஞ்சாரா விராசத் அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார் .

இதன் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் 9.4 கோடி விவசாயிகளுக்கு ரூபாய் 20,000 கோடி நிதியை பிரதமர் மோடி விடுவித்தார். தொடர்ந்து நமோஷேத் காரி மகாசன்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் ரூபாய் 2000 கோடி நிதியை பிரதமர் மோடி விடுவித்தார். மேலும் ரூபாய் 1,920 கோடி மதிப்பிலான 75,000- க்கும்மேற்பட்ட விவசாய உள்கட்டமைப்பு திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.அதோடு 9,200 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை பிரதமர் தொடங்கி வைத்தார். இதன் மொத்த வருவாய் சுமார் 1300 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பு துறைகள் தொடர்பான ரூபாய் 23,300 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார் .மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள மொத்தம் 19 மெகாவாட் திறன் கொண்ட ஐந்து சோலார் பூங்காக்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது மகாராஷ்டிரா அரசின் பெண்களுக்கான நிதி உதவி திட்டத்தில் பயன் பெற்ற பயனாளிகளை பிரதமர் மோடி கௌரவித்தார்.

Tags:    

Similar News