அயோத்தி ராமர் கோவில் 2500 ஆண்டுகள் நிலைத்து நிற்கும்- கட்டிட வடிவமைப்பாளர் சந்திரகாந்த் சோமபுரா மேலும் கூறியது என்ன?
அயோத்தி ராமர் கோவில் 2500 ஆண்டுகள் நிலைத்து இருக்கும் என்று கோவில் கட்டிட வடிவமைப்பாளர் சந்திரகாந்த் சோமபுரா கூறினார்.
அயோத்தி கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் கட்டிட வடிவமைப்பை குஜராத்தை சேர்ந்த சந்திரகாந்த சோம புறா என்பவர் தான் செய்து இருக்கிறார் அவருக்கு 80 வயது ஆகிறது அவரது மகன்கள் நிகழும் மற்றும் ஆகியோர் கண்காணிப்பில் தான் தற்போது கோவில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது கோவில் கட்டுமானம் குறித்து சந்திரகாந்த சோமபுரா கூறியதாவது:-
ராமஜென்ம பூமியில் கோவில் கட்ட வேண்டும் அதற்கு வடிவமைப்பு செய்து தாருங்கள் என்று 1989 ஆம் ஆண்டு என்னிடம் கேட்டார்கள் .அதற்காக என்னை கோவில் வளாகத்திற்குள் அழைத்துச் சென்றார்கள் .அப்போது இங்கு ராணுவ பாதுகாப்பு போடப்பட்டிருந்ததால் கட்டிட அளவு எடுப்பதற்கான உபகரணங்கள், பேனா, பென்சில் ,பேப்பர் என எந்த பொருள்களையும் எடுத்துவர முடியவில்லை .இதனால் நான் நடந்தே அளவு எடுத்தேன் .
ஒவ்வொரு அளவையும் எனது மனதில் குறிப்பெடுத்து வைத்துக் கொண்டேன். பின்னர் வீட்டிற்கு திரும்பியவுடன் கோவில் கட்டுமானத்திற்கு மூன்று வரைபடங்கள் தயாரித்தேன். அதனை அடிப்படையாகக் கொண்டு மரத்தால் கோவில் மாதிரியை உருவாக்கினேன். இந்த கோவில்கள் 1992 ஆம் ஆண்டு நடந்த கும்பமேளா விழாவின் போது சாமியார்கள் பார்வைக்கு வைத்தேன். அதில் அவர்கள் தேர்வு செய்த ஒன்றுதான் அயோத்தி ராமர் கோவிலாக தற்போது உருவாகி வருகிறது.
அயோத்தி ராமர் கோவில் சனாதன முறைப்படி நாகரா கட்டிடக்கலையில் கட்டப்பட்டு வருகிறது. கோவில் கட்டுமானத்தில் இரும்பு,உருக்கு போன்ற எந்த உலோகங்களையும் பயன்படுத்தவில்லை .பழங்கால முறைப்படி வெறும் கற்கள் மூலமே நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டு வருகிறது . இந்த கோவில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு மேல் நீடித்து நிலைத்து இருக்கும். நிலநடுக்கம் , வெள்ளம் ,மழை போன்ற எந்த ஒரு பேரிடரையும் தாங்கி நிற்கும் அளவுக்கு கோவில் மிகவும் வலுவாக கட்டப்பட்டு வருகிறது.