மும்பையில் மொத்தம் ரூ. 29,400 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி!
மோடி மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு அதிக உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறார் .மும்பையில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று மும்பையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தானே - போரிவாலி இரட்டை சுரங்கப்பாதை ரூபாய் 16,500 கோடியில் அமைக்கப்படுகிறது. இது முக்கிய திட்டமாகும். மொத்தம் ரூபாய் 29,400 கோடி திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். மூன்றாவது முறை பிரதமர் ஆகியுள்ள பிரதமர் மோடி , "மும்மடங்கு ஆற்றலுடனும் மும்மடங்கு வேகத்துடனும் செயலாற்றுவோம். இந்தியாவை மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக உருவாக்குவோம்" என உறுதி ஏற்று செயல்பட்டு வருகிறார்.
இந்தியாவின் பொருளாதார தலைநகர் என்று கருதப்படுகின்ற மும்பையில் போக்குவரத்து நெரிசல் பெரும் பிரச்சனையாக உள்ளது. தானே- போரிவாலி இடையே 16,600 கோடி செலவில் இரட்டை சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது .5 ஆண்டுகளில் இப்பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதான் இந்தியாவிலேயே நகர் பகுதியில் அமைக்கப்படும் மிக நீளமான சுரங்கப் பாதையாக இருக்கும். இந்த சுரங்கப்பாதையின் நீளம் 10.25 கிலோமீட்டர் ஆகும். இந்த சுரங்கப்பாதையில் ஆங்காங்கே நெருக்கடி கால அவசர வழிகள் அமைக்கப்படும் .
இந்த சுரங்கப்பாதை நடைமுறைக்கு வரும் போது இரண்டு இடங்களுக்கான பயண நேரம் சுமார் ஒரு மணி நேரம் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் காற்று மாசு மற்றும் ஒலி மாசு குறையும். சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையத்திலும், லோக மானிய திலகர் ரயில் நிலையத்திலும் நீட்டிக்கப்பட்ட நடைமேடை மற்றும் புதிய நடைமேடையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்பணிக்கிறார். மொத்தம் ரூபாய் 29,400 கோடி மதிப்பில் ஆன திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.