மத்திய அரசின் புத்தாண்டு பரிசு.. தமிழகத்தின் வரி பகிர்வாக ரூ. 2,976 கோடி விடுவிப்பு..

Update: 2023-12-23 01:50 GMT

வழக்கமாக ஒவ்வொரு மாதமும் மாநிலங்களுக்கு வரி பகிர்வாக குறிப்பிட்ட தொகையை மத்திய அரசு விடுவிப்பது வழக்கம். மொத்தம் 14 தவணைகளாக இந்த தொகை விடுவிக்கப்படும். இதில் டிசம்பர் மாதத்திற்கான பங்காக ரூ.72,961 கோடி ஏற்கனவே கடந்த 11ம் தேதி விடுவிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில், மாநிலங்களுக்கு ரூ.72,961 கோடி தற்போது கூடுதலாக விடுவிக்கப்பட்டுள்ளது. வரிப்பகிர்வின் கூடுதல் தவணையாக மாநிலங்களுக்கு ரூ.72,961.21 கோடியை மத்திய அரசு விடுவித்தது.


தமிழ்நாட்டுக்கு ரூ. 2976.10 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் பண்டிகைகள் மற்றும் புத்தாண்டைக் கருத்தில் கொண்டு, பல்வேறு சமூக நல நடவடிக்கைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக மாநில அரசுகளின் கரங்களை வலுப்படுத்த ரூ .72,961.21 கோடி மதிப்புள்ள கூடுதல் தவணை வரிப் பகிர்வை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பண்டிகை காலங்களில் சமூக நல திட்டங்களை செயல்படுத்தவும் உட்கட்டமைப்பு திட்டங்களை வகுக்கவும் மாநிலங்களின் கரங்களை வலுப்படுத்துவதற்காக கூடுதல் தவணைத் தொகை வழங்கப்பட்டுள்ளது.


இந்தத் தவணை 2024, ஜனவரி 10 அன்று மாநிலங்களுக்கு செலுத்த வேண்டிய வரிப் பகிர்வு தவணையாகும். 2023, டிசம்பர் 11 அன்று ஏற்கனவே விடுவிக்கப்பட்ட ரூ.72,961.21 கோடியை விட இது கூடுதலாகும். தமிழ்நாட்டுக்கு ரூ.2976.10 கோடி விடுவிக்கப் பட்டுள்ளது.

Input & Image courtesy:News


Tags:    

Similar News