அதிர்ச்சியில் உலக நாடுகள்: ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 3 வீரர்களுக்கு கொரோனா உறுதி!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23-ம் தேதி ஒலிம்பி விளையாட்டுப் போட்டிகள் இன்னும் ஐந்தே நாட்களில் துவங்க உள்ளது. இதற்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் டோக்கியோவில் உள்ள ஒலிம்பிக் பகுதிக்கு சென்று தங்கியுள்ளனர். தற்பொழுது அங்கு கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தது. அதிகபாதுகாப்பு அம்சங்கள், தீவிர பரிசோதனைக்குப்பின் அனுமதிக்கப்படக்கூடிய ஒலிம்பிக் பகுதிக்குள் தங்கி இருந்த 3 தடகள வீரர்களுக்கு தற்பொழுது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மேலும் அந்த 3 வீரர்களும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை குறிப்பிட ஒலிம்பிக் நிர்வாகக் குழுவினர் மறுத்து விட்டனர். தீவிர சோதனைக்கு பிறகு ஒலிம்பிக் நடைபெறும் பகுதிக்குள் வீரர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அங்குள்ள வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது இதுவே முதன்முறை. இதனால், மற்ற வீரர்களும் அச்சம் அடைந்துள்ளனர். இதுவரை ஒலிம்பிக் போட்டிக்கு வந்தவர்களில் 10 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜப்பான் அரசு கடந்த 22ஆம் தேதி வரை அவசர நிலை அறிவிப்பு அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்த பட்டு தான், வீரர்கள் ஒலிம்பிக் நடைபெறும் இடத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இருந்தாலும் அவர்களுக்கு அங்கு சென்றபின் தொற்று ஏற்படுவது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்தியாவை சேர்ந்த ஒரு குழுவினர் நேற்று டோக்கியோவிற்கும் பயணம் மேற்கொண்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.