சந்திராயன் 3: வல்லரசு நாடுகளுக்கு இடையே சாதித்த இந்தியா.. இஸ்ரோவிற்கு உயரிய விருது..

Update: 2023-12-23 01:49 GMT

சந்திரயான் -3 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய இஸ்ரோவுக்கு, ஐஸ்லாந்து நாட்டின் உயரிய விருதான ‛ லீப் எரிக்சன் லூனார் ' விருது வழங்கப்பட்டு உள்ளது. வளர்ந்த வல்லரசு நாடுகளுக்கு இடையே கடும் போட்டு நிலவி வரும் சூழ்நிலையில் இந்தியா பல்வேறு போட்டியாளர்களுக்கிடையே நிலவின் தென் பகுதியில் தன்னுடைய சந்திராயன் 3 வெற்றிகரமாக திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறது.நிலவின் தென் பகுதியில் ஆய்வு செய்வதில் வல்லரசு நாடுகள் இடையே கடும் போட்டி இருந்தது.

ஆனால் சந்திரயான் 3 திட்டம் மூலம் இந்தியா அந்த சாதனையை படைத்தது. இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் அக்டோபர் மாதம் சரியாக 23ம் தேதி நிலவின் தென் பகுதியில் தரையிறங்கி இந்திய மக்கள் அனைவரையும் பெருமையடைய செய்தது. இந்த சாதனைக்கு பிறகு, உலகின் முன்னணி நாடுகள் இஸ்ரோ உடன் இணைந்து செயல்பட முன்வந்துள்ளன. உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவின் இந்த ஒரு செயலை மிகவும் பாராட்டியது.


இந்நிலையில், இஸ்ரோவுக்கு ஐஸ்லாந்து நாடு உயரிய பரிசை வழங்கி கவுரவித்துள்ளது. அந்நாட்டின் ஹூசாவிக் நகர ஆய்வு அருங்காட்சியகம், இஸ்ரோவுக்கு 2023 லீப் எரிக்சன் லூனார் என்ற உயரிய விருதை வழங்கி உள்ளது. இதனை, இஸ்ரோ சார்பில் ஐஸ்லாந்துக்கான இந்திய தூதர் பி.ஷியாம் பெற்றுக்கொண்டார். இந்த விருதை வழங்கியதற்காக, இஸ்ரோ தலைவர் சோம்நாத் நன்றி தெரிவித்து செய்தி அனுப்பி உள்ளார். 2015 ஆம் ஆண்டிலிருந்து ஐஸ்லாந்து இன்று ஒரு வருவதை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News