பிரதமரின் வீடு கட்டும் திட்டம்.. 3 கோடி வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்..
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்தில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 3 கோடி வீடுகள் கட்டுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற மோடி 3.0 அரசின் தொடக்கக் கூட்டம் இதுவாகும். ஏற்கனவே கடந்த பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்னும் ஐந்து ஆண்டுகளில் இரண்டு கோடி கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடும்பங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வீடுகள் கட்டி தரப்படும் என்று அறிவித்து இருந்தார். ஆனால் தற்போது அவை மூன்று கோடியாக அதிகரித்து இருக்கிறது.
3 கோடி கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடும்பங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வீடுகளை கட்டி கொடுத்து உதவிகளை வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதில் தகுதியான குடும்பங்களின் எண்ணிக்கையை அதிகரித்து உள்ளது மோடி அரசு. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், கடந்த 10 ஆண்டுகளில் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள ஏழைக் குடும்பங்களுக்கு மொத்தம் 4.21 கோடி வீடுகள் கட்டி முடிக்கப் பட்டுள்ளன. அந்த வகையில் தற்போது மேலும் 3 கோடி கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடும்பங்கள் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பயனடைய இருக்கிறது. இதற்கான அறிவிப்பை தான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் தற்போது வெளியிட்டு இருக்கிறது.
தகுதியுள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகளை கட்ட உதவுவதற்காக மத்திய அரசு 2016 நிதியாண்டு முதல் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் வீட்டுக் கழிப்பறைகள், LPG இணைப்பு, மின் இணைப்பு மற்றும் செயல்பாட்டு வீட்டுக் குழாய் இணைப்பு போன்ற அடிப்படை வசதிகள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் இதர திட்டங்களுடன் இணைந்து வழங்கப்படுகின்றன.
Input & Image courtesy: NDTV News