திருவண்ணாமலை கோவிலில் 3 தலைமுறையாக இருந்த பாத்திர கடைகளுக்கு அனுமதி வழங்க கோரி அளித்த மனு!!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெறுவதற்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. நிலையில் உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் மற்றும் சௌந்தர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்ட பொழுது முன்னாள் நகராட்சி தலைவரான ஸ்ரீதரன் தலைமையில் முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் தனுஷ் மற்றும் முன்னாள் அறக்கவலர் ராஜாராம் உட்பட வியாபாரிகள் அனைவரும் இணைந்து நீதிபதிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், அதனால் உள்ளூர் மக்களின் உரிமைகளையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க வேண்டும் என்றும் உள்ளூர் மக்கள் எளிதில் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இது மட்டுமல்லாமல் அண்ணாமலையார் கோவிலில் ராஜ கோபுரம் முன்பாக கடந்த 1962ஆம் ஆண்டு முதல் பாத்திரக்கடைகளுக்காக ஒதுக்கப்பட்ட இடம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மூன்று தலைமுறைகளாக இருந்து வந்த கடைகளை மீண்டும் அனுமதித்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.