வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடந்த தாக்குதலில் 3-வது நபர் உயிரிழப்பு!!

By :  G Pradeep
Update: 2026-01-04 14:35 GMT

வங்கதேசத்தில் மர்ம கும்பல் தாக்கியதில் இந்து மதத்தை சேர்ந்த 3-வது நபர் நேற்று உயிரிழந்தார். ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்க்கப்பட்டு, முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால நிர்வாகம் பொறுப்பேற்றதை அடுத்து இந்துக்கள் மீதான தாக்குதல் தொடங்கியது.


கோகன் தாஸ் என்ற இந்து நபர் மர்ம கும்பலால் தாக்கப்பட்டு, பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டார். பின்னர் குளத்தில் குதித்து உயிர் தப்பினார். ஆனால், நேற்று சிகிச்சை பலிக்காமல் உயிரிழந்தார்.


போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் மட்டும் 2 இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

Tags:    

Similar News