காசி தமிழ் சங்கமம் 3.0 மொழிபெயர்ப்பு பட்டறையில் கலந்து கொண்ட பாரதியார் கொள்ளுப்பேத்தி:தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகங்கள் வெளியிட்டு!
உத்திரபிரதேசம் வாரணாசியில் நடைபெற்று வருகின்ற காசி தமிழ் சங்கமம் 3.0 நிகழ்ச்சியில் நேஷனல் புக் ட்ரஸ்ட் ஆப் இந்தியா நடத்திய மொழிபெயர்ப்பு பட்டறையில் பாரதியாரின் கொள்ளுப்பேத்தியான முனைவர் ஜெயந்தி முரளி கலந்து கொண்டுள்ளார்
காசி தமிழ் சங்கமம் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது இதில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மத்திய செய்தி ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல் முருகன் கலந்து கொண்டனர்
இந்த நிலையில் 21 பிப்ரவரி 2025 இல் மொழிபெயர்ப்பு பட்டறை நடத்தப்பட்டது. இந்த மொழிபெயர்ப்பு பட்டறையில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் 24 இந்தி சிறுவர் இலக்கிய நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்த மொழிபெயர்ப்புகளில் செழுமைப்படுத்த தேவையான கருத்துக்களையும் முனைவர் ஜெயந்தி முரளி வழங்கியுள்ளார்
இதனை அடுத்து இந்த நூல்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சஞ்சய் குமார் வெளியிட்டனர்