மோடி 3.0 அரசு.. 100 நாள் இலக்கு.. பம்பரமாக சுழன்று வேலை செய்யும் மத்திய அமைச்சர்..

Update: 2024-06-15 11:58 GMT

புதிய அரசு அமைந்த பின் முதல் 100 நாட்களில் சுகாதார இலக்குகளை அடைவது குறித்த உயர் நிலைக் கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தலைமை தாங்கினார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் தற்போது மூன்றாவது முறையாக பதவியேற்று சிறப்பாக பணிகளை செய்து வருகிறது. அந்த வகையில் அனைத்து துறை அமைச்சர்களும் தங்களுக்கான இலக்குகளை நிர்ணயித்து அதன்படி தங்களுடைய நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்பதற்காக பம்பரமாக சுழன்று வேலைகளை செய்து வருகிறார்கள். ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியளிக்கப்பட்ட பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PMJAY) திட்டத்தின் கீழ் சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து மத்திய அமைச்சர் நட்டா வலியுறுத்தி உள்ளார். இந்நிலையில் புதிய அரசு அமைந்த பின் முதல் 100 நாட்களில் சுகாதார இலக்குகளை அடைவது குறித்து புதுதில்லியில் நடைபெற்ற உயர் நிலைக் கூட்டத்திற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தலைமை தாங்கினார்.


இந்தத் துறையின் இணையமைச்சர்களான அனுப்பிரியா பட்டேலும், ஜாதவ் பிரதாப்ராவ் கண்பத்ராவும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அமைச்சகத்தின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்த நட்டா, தரமான, சுகாதார வசதிகளையும், சுகாதார அமைப்புகளையும் வழங்க வேண்டியதன் அவசியம் பற்றி வலியுறுத்தினார். தொற்றா நோய்களின் அதிகரிப்பு குறித்து கவலை தெரிவித்த அவர், இளைஞர் இடையே புகையிலை பழக்கத்தை கட்டுப்படுத்த திட்டமிட்ட பிரச்சாரங்கள் தேவை என்று கூறினார்.


ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்று கூறிய அமைச்சர், தொற்றா நோய்கள் பற்றியும் புகையிலையால் ஏற்படும் தீமைகள் குறித்தும் சாமான்ய மக்கள் புரிந்து கொள்ளும் எளிய முறையில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தக் கூட்டத்தில் சுகாதாரத் துறை செயலாளர் அபூர்வ சந்தரா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News