உசுப்பேத்திய சீனாவிற்கு இந்தியா கொடுத்த பதிலடி...! திபெத்தில் 30 இடங்களுக்கு சூட்டப்பட்ட புதிய பெயர்கள்!
பல ஆண்டுகளாகவே இந்தியா சீனா இடையே எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த 2020 ஆம் ஆண்டு மே ஐந்தில் லடாக் எல்லையை சீனா ஆக்கிரமிக்க முயன்ற போது, ஏற்பட்ட மோதல் பெரும் பிரச்சனையாக வெடித்தது. மேலும் இதனால் பாங்காங் ஜோ பகுதியில் இருநாட்டு வீரர்களுக்கு இடையே சண்டை மூண்டது. அதுமட்டுமின்றி இந்த சண்டையால் இரு நாடுகளுக்கும் இடையே இருந்த உறவு கடுமையாக பாதிக்கப்பட்டதோடு வர்த்தக உறவை தவிர, மற்ற அனைத்தும் சுமூகமற்ற நிலைக்கு மாறியது.
இருப்பினும் இந்த பிரச்சனைக்கு முடிவு காண்பதற்காக இரு நாட்டின் ராணுவம் மற்றும் தூதரகம் மத்தியில் 21 சுற்றுகள் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அவற்றிலும் எந்த பிரயோஜனமும் கிடைக்காமல் போனது. அதுமட்டுமின்றி இந்தியாவை கோபமடையச் செய்யும் வகையில் பல நடவடிக்கைகளில் சீனா அவ்வப்போது ஈடுபட்டு வருகிறது. அதாவது இந்திய நாட்டின் வடகிழக்கு மாநிலமான ஆந்திர பிரதேசத்தை தன் நாடாக சொந்தம் கொண்டாடிக் கொண்டு இருக்கும் சீனா, அம்மாநிலத்தில் உள்ள 30 இடங்களுக்கு சீன மொழியில் பெயர்களை சூட்டி அதனை கடந்த ஏப்ரல் மாதம் மாற்றியது.
ஆனால் இவற்றிற்கு இந்தியா கடுமையான கண்டனத்தை முன்வைத்தது. அருணாச்சல பிரதேசத்தின் 30 இடங்களுக்கு புதிய பெயர்களை சூட்டுவதன் மூலம், அம்மாநிலம் இந்தியாவிற்குட்பட்ட மாநிலம் என்ற உண்மை மட்டும் மாறிவிடாது என மத்திய அரசு சீனாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்தது. இதனை அடுத்தும் இந்தியா சீனாவிற்கு தொடர்ந்து எச்சரிக்கை விடும் வகையில் அருணாச்சல பிரதேசத்தின் எல்லைகளில் தனது ராணுவத்தை பலப்படுத்தி வருகிறது. இதனை அடுத்து, தற்போது மத்தியில் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக பதவியேற்றிருப்பதால் சீனாவிற்கு கொடுக்கப்படும் பதிலடியை இன்னும் தீவிரமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது இந்தியா.