மோடி 3.0 அரசு.. 2வது முறையாக பாதுகாப்பு அமைச்சராக தொடர்கிறார் ராஜ்நாத் சிங்..

Update: 2024-06-11 13:20 GMT

ராஜ்நாத் சிங் தொடர்ந்து இரண்டாவது முறையாக பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். 2019-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை வெற்றிகரமாகப் பொறுப்பு வகித்த ராஜ்நாத் சிங்கிற்குப் பாதுகாப்புத் துறையைத் தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பிரதமரின் ஆலோசனைப் படி குடியரசுத் தலைவர் ஒதுக்கி உள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ மக்களவைத் தொகுதி உறுப்பினரான ராஜ்நாத் சிங், 2019 ஜூன் 1 அன்று, முதல் முறையாகப் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றார்.


ராஜ்நாத் சிங் 1951 ஜூலை 10, அன்று உத்தரப் பிரதேசத்தின் சந்தோலி மாவட்டத்தில் பிறந்தார். கோரக்பூர் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுநிலைப் பட்டம் பெற்று ஆசிரியராகப் பணியாற்றினார். 1977-1980 மற்றும் 2001-2003-ம் ஆண்டுகளில் உத்தரப்பிரதேச சட்டப் பேரவை உறுப்பினராகப் பணி ஆற்றினார். 1991-ம் ஆண்டு முதல் 1992-ம் ஆண்டு வரை உத்தரப் பிரதேச அரசில் கல்வி அமைச்சராக இருந்தார். 1999-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை மத்திய அமைச்சரவையில் சாலைப் போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றினார்.

பின்னர் 2000 – 2002 ஆண்டுகளில் உத்தரப்பிரதேச முதலமைச்சராக இருந்தார். 2003-ம் ஆண்டில், மத்திய அமைச்சரவையில் வேளாண் அமைச்சராகப் பணியாற்றினார். 1994-1999 மற்றும் 2003-2008-ம் ஆண்டுகளில் இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். 2009-ம் ஆண்டில் அவர் 15 வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார். 2014 மே 27 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் ராஜ்நாத் சிங் உள்துறை அமைச்சராக நியமிக்கப் பட்டார். 2019, 2024-ம் ஆண்டில், அவர் ராஞ்சி தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News