கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு சித்திரை தேர்திருவிழா- அதிரடி உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம்!
32 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு கோயம்புத்தூர் உக்கடத்தில் உள்ள கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில் வரலாற்று சிறப்புமிக்க சித்திரை தேர் திருவிழா சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து தொடங்கப்பட உள்ளது.;

32 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு கோயம்புத்தூர் உக்கடத்தில் உள்ள கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில் வரலாற்று சிறப்புமிக்க சித்திரை தேர் திருவிழா சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து தொடங்கப்பட உள்ளது. தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது ஷபிக் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில் ஆண்டு தோறும் விழா எந்தவித இடையூறும் இல்லாமல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியது. மேலும் மாவட்ட நிர்வாகம் தேவையான அனுமதிகளை வழங்கவும் நிகழ்வுக்கு போதுமான போலீஸ் பாதுகாப்பை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களின் வாதங்களை பதிவு செய்த நீதிமன்றம் பிப்ரவரி 11, 2025 அன்று வெற்றிகரமாக நடத்தப்பட்ட தாய் தேர் திருவிழாவை தொடர்ந்து மே 10,2025 அன்று திட்டமிடப்பட்ட சித்திரை தேர் திருவிழாவை நடத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தது. மேலும் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தடையின்றி தொடர்வதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது. கோவிலின் உணர் திறன் மிக்க இடம் மற்றும் திருவிழாவை நடத்துவதில் உள்ள வரலாற்று சவால்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்தது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் இந்த கோவில் அக்டோபர் 23, 2022 அன்று கார் குண்டுவெடிப்பு நடந்த இடம் ஆகும். ஆரம்பத்தில் தமிழக காவல்துறையால் எல்பிஜி சிலிண்டர் வெடிப்பு என்று நிராகரிக்கப்பட்டாலும் தேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய விசாரணைகள் ஒரு பயங்கரமான கோணத்தை வெளிப்படுத்தினர்.இது ஒரு டஜன் சந்தேகம் அவர்களை கைது செய்ய வழி வகுத்தது.முக்கிய குற்றவாளியான ஜமீஷா முபின் திட்டமிட்டதை விட முன்னதாகவே நடந்த வெடிப்பில் இறந்தார்.
கோயிலின் தேர் திருவிழா 1992 வரை தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது.அதன் பிறகு கோயில் தேரில் தேவையான பழுது பார்க்க பணிகள் காரணமாக நிறுத்தப்பட்டது 1993 முதல் 2010 வரை சித்திரை திருவிழா மற்றும் கோயில் தேர் ஊர்வலம் நடைபெறவில்லை 2010 ஆம் ஆண்டில் ஒரு புதிய மரத்தேர் இயக்கப்பட்டது மேலும் திருவிழாவை மீண்டும் தொடங்க அனுமதி கூறப்பட்டது இருப்பினும் கடைசி நேரத்தில் காவல் துறை அனுமதி மறுத்தது.
2014 முதல் 2020 வரை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின் ஒத்துழைப்புடன் தைப்பூச தேர்த்திருவிழா மட்டுமே அனுமதிக்கப்பட்டது.அதே நேரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக சித்திரை திருவிழா நிறுத்தி வைக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி ஜெகன்நாத் இந்த ஆண்டு முதல் சித்திரை தேர் திருவிழா இந்து சமய மற்றும் அறநிலையத்துறையின் நிர்வாகத்தின் கீழ் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்று வாதிட்டார். ஜனவரி 2025 இல் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்த பிறகு பிப்ரவரி 14,2025 வெற்றிகரமாக தைப்பூச தேர் திருவிழா நடந்ததை பற்றி சுட்டி காட்டினார். மனுதாரர் பல்வேறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு பதில்களை பெற்றிருந்தார்.