தமிழகத்தில் ரூ.3,260 கோடி செலவில் தேசிய நெடுஞ்சாலை பணி நிறைவு.. தொடங்கி வைத்த பிரதமர்..

Update: 2024-03-12 05:37 GMT

தமிழ்நாட்டில் ரூ.3, 260 கோடி செலவில் 157 கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுப் பணிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி நிறைவடைந்த பணிகளைத் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் மெய்நிகர் வடிவில் கலந்து கொண்டார். தேசிய நெடுஞ்சாலை எண். 67, புதிய தேசிய நெடுஞ்சாலை 181 ஆகியவற்றில் 10.34 கி.மீ. தூரத்திற்கான சாலைப் பிரிவுகளை பிரதமர் தொடங்கிவைத்தார். இதன் மதிப்பு ரூ.23 கோடியாகும். தேசிய நெடுஞ்சாலை 45ஏ-ல், விழுப்புரம்-புதுச்சேரி-நாகப்பட்டினம் சாலையில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பழைய மேம்பாலத்திற்கு பதிலாக கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தையும் அவர் தொடங்கிவைத்தார். இந்தப் பாலம் ரூ.27 கோடி ரூபாய் செலவில் 0.57 கி.மீ. தூரத்திற்கு கட்டப்பட்டது.


நாகப்பட்டினம், கூடலூர்-மைசூர் சாலையில், பெரியநாயக்கன் பாளையம்- கோவைப் புறநகர் பகுதியில் ரூ.99 கோடி செலவில் 1.76 கி.மீ. தூரத்திற்கு கட்டப்பட்ட மேம்பாலத்தையும் பிரதமர் தொடங்கிவைத்தார். மேலும் தேசிய நெடுஞ்சாலை 44-ல் தர்மபுரி-சேலம் பிரிவில், 7 கி.மீ. தூரத்திற்கு தோப்பூர் சாலைப்பிரிவை அகலப்படுத்தும் பணிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இதன் மதிப்பு ரூ.905 கோடியாகும். ரூ.1376 கோடி ரூபாய் செலவில் திருவள்ளூரில் இருந்து, தமிழ்நாடு-ஆந்திரா எல்லைப் பகுதிவரை சென்னை-திருப்பதி தொகுப்பு -1-ல், நான்கு வழிச்சாலையை இணைக்கும் 44 கி.மீ. தூரச் சாலைக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.


இருவழிச்சாலையாக உள்ள தேசிய நெடுஞ்சாலை 81 (கோயம்புத்தூர்-சிதம்பரம்) (பழைய தேசிய நெடுஞ்சாலை எண்.67 நாகப்பட்டினம்-கூடலூர்) அணுகுசாலை வசதியுடன் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். 47.6 கி.மீ. தொலைவுக்கான இந்தச்சாலை ரூ.275 கோடி செலவில் மேம்படுத்தப் படவுள்ளது. கடலூர்- விருத்தாச்சலம்- சேலம் இடையிலான தேசிய நெடுஞ்சாலை எண்.532-ல் அணுகுசாலை வசதியுடன் இருவழிச்சாலையை, நான்கு வழிச்சாலையாக அகலப் படுத்துவதுடன், இந்த சாலையின் பல்வேறு இடங்களில் சாலையின் நடுப்பகுதியில் தடுப்பு அமைத்தல், மழைநீர் வடிகால் கட்டுதல் மற்றும் கூடுதல் பாலப்பணிகள் ரூ.295 கோடி செலவில் மேற்கொள்ளவும் அடிக்கல் நாட்டப்பட்டது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News