தமிழக ரயில் சேவைகளில் புதிய மாற்றம்!! 35 ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தமா??
By : G Pradeep
Update: 2026-01-20 11:41 GMT
தமிழகத்தில் 35 ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்கள் அளிக்க இந்திய ரயில்வே உத்தரவிட்டுள்ள நிலையில் அதில் 29 விரைவு ரயில்கள் மற்றும் 6 பாசஞ்சர் ரயில்கள் அடங்கும் என தெரிவித்துள்ளது.
சென்னை - கோயம்புத்தூர் கோவை விரைவு ரயில், சென்னை - பெங்களூரு டபுள் டெக்டர் ரயில் ஆகிய ரயில்களுக்கு திருவள்ளூர் நிலையத்தில் நிறுத்தம் வழங்கப்படவுள்ளது.
சென்னை - ஜோலார்பேட்டை விரைவு ரயில் இனி அம்பத்தூரில் நின்று செல்லும். அதேநேரம் சென்னை எழும்பூர் - சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் விரைவு ரயிலுக்கு அரக்கோணத்தில் நிறுத்தம் வழங்கப்படவுள்ளது.
இந்த நடவடிக்கை மூலமாக, சென்னை சென்ட்ரல், எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் ஏற்படும் நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகள் முக்கிய ரயில் முனையங்களுக்குப் பயணிக்காமலேயே நீண்ட தூர ரயில்களை எளிதாக பிடிப்பதற்கு உதவும்.