மதுபான நிறுவனங்களில் அதிரடியாக சிக்கிய ரூபாய் 353 கோடி!

ஒடிசாவில் வரி ஏய்ப்பு புகார் எதிரொலியாக மதுபான நிறுவனங்களில் நடந்த வருமான வரி சோதனையில் ரூபாய் 353 கோடி சிக்கியது.

Update: 2023-12-12 08:30 GMT

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பியாக இருப்பவர் தீரஜ் பிரசாத் சாகு. இவருடைய குடும்பத்துக்கு சொந்தமான மதுபான தயாரிப்பு ஆலை ஒடிசா மாநிலம் பவுத் மாவட்டத்தில் இயங்கி வருகிறது. இந்த ஆலய வருமானத்தை சரிவர அரசுக்கு கணக்கு காட்டாமல் ஏய்ப்பு செய்து கோடிக்கணக்கில் பணம் சேர்த்து இருப்பதாக வருமானவரித்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதை அடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் புவனேஸ்வர், சம்பல்பூர், திட்லாகர், சுந்தர்கர் போலாங்கீர் உள்ளிட்ட இடங்களில் மதுபான ஆலை மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களில் கடந்த 6-ஆம் தேதி முதல் அதிரடி சோதனையில் இறங்கினர். இந்த சோதனையில் வருமானவரித்துறையினருடன் ததகவல் தொழில்நுட்ப வல்லுனர்களும் இணைந்து பணியாற்றினர்.

இந்த சோதனையில் கத்தை கத்தையாக பணம் சிக்கியது. நேற்று முன்தினம் இரவு வரை சிக்கிய பணம் எண்ணும் பணி முடிந்தது. அப்போது கணக்கில் வராத ரூபாய் 353 கோடி இருந்தது தெரியவந்தது.அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் கூறும் போது, நாட்டிலேயே எந்த ஒரு புலனாய்வு அமைப்பும் செய்யாத அதிகபட்ச சோதனை நடவடிக்கை இதுவாகும். அடுத்த கட்டமாக ஆலை நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்கள் மீது கவனம் செலுத்தி விசாரணை நடத்த உள்ளோம் என்றனர் .

ஆறாவது நாளாக சோதனை நேற்றும் நடந்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதா தளம் மற்றும் ஒடிசா அரசன் மீது பா .ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தலைவர் மன்மோகன் சமல் தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் "ஒடிசாவில் சட்டவிரோத மதுபான வியாபாரத்தை எளிதாக்குவதோடு கருப்பு பணத்தை பெருக்குகிறது.

ஒடிசாவின் கலால் கொள்கையே மாநிலத்தில் மதுபான மாஃபியாக்களின் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது. மதுபான வியாபாரிகளுக்கு அரசு தேவையில்லாத சலுகைகளை அளிக்கிறது. ஜனதா தளம் அந்த கருப்பு பணத்தை கொண்டு தேர்தலை எதிர்கொள்கிறது என்று தெரிவித்துள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஜனதா தள கட்சி சார்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source :Daily thanthi

Similar News