வாரணாசி செல்லும் பிரதமர்:ரூ.3,880 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் தொடக்கம்!

Update: 2025-04-10 15:51 GMT
வாரணாசி செல்லும் பிரதமர்:ரூ.3,880 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் தொடக்கம்!

பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 11 ஆம் தேதி தனது மக்களவைத் தொகுதியான வாரணாசியில் ரூ.3884 கோடி மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களைத் திறந்து வைத்து அடிக்கல் நாட்ட உள்ளார்

ரூ.3884 கோடி மதிப்பிலான இந்த முயற்சியின் முக்கிய சிறப்பம்சம் பாபத்பூர் விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தின் கீழ் ரூ.652.64 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலை-31 இல் ஆறு வழிச் சுரங்கப்பாதை அமைப்பதாகும் இதில் சுரங்கப்பாதைக்கு மட்டும் ரூ.325 கோடி ஒதுக்கப்படும்

அதுமட்டுமின்றி விமான நிலையப் பகுதி,நீர் வழங்கல் திட்டம்,அரசு பட்டப்படிப்பு கல்லூரி,பாலிடெக்னிக் கல்லூரி,ஹாக்கி மைதானம்,போலீஸ் போக்குவரத்து விடுதி மற்றும் ராம் நகர் காவல் பாதையில் உள்ள முகாம்கள்,சாலை விரிவாக்கம் மற்றும் மருவாடியில் மேம்பாலம் ஆகியவை பிற திட்டங்களில் அடங்கும்.

மேலும் ஷிவ்பூரில் ரூ.6.15 கோடி செலவில் அமைக்கப்படும் மினி ஸ்டேடியம் இளைஞர்களுக்கு கிரிக்கெட்,ஹாக்கி,கால்பந்து மற்றும் யோகா பயிற்சிக்கான வசதிகளை வழங்கும்

ஜல் ஜீவன் மிஷனின் கீழ் 130 கிராமப்புற குடிநீர் திட்டங்களுக்கு ரூ.345.12 கோடியும், 400 கே.வி.மின் துணை மின்நிலையம் மற்றும் டிரான்ஸ்மிஷன் லைன்களுக்கு ரூ.1000 கோடிக்கும் அதிகமாகவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

Tags:    

Similar News