டிசம்பர் 4 ஆம் தேதி மகாராஷ்டிராவிற்கு செல்கிறார் பிரதமர்.. ஏன் என்று தெரியுமா?
பிரதமர் நரேந்திர மோடி, 4 டிசம்பர் 2023 அன்று மகாராஷ்டிராவுக்குச் செல்கிறார். மாலை 4:15 மணியளவில், மகாராஷ்டிராவின் சிந்துதுர்க்கைச் சென்றடையும் பிரதமர், ராஜ்கோட் கோட்டையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிலையைத் திறந்து வைக்கிறார். அதன்பிறகு, சிந்துதுர்க்கில் நடைபெறும் "கப்பற்படை தினம் 2023" கொண்டாட்டங்களை குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்கிறார். சிந்துதுர்க்கின் தர்கர்லி கடற்கரையிலிருந்து இந்திய கடற்படையின் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், விமானங்கள் மற்றும் சிறப்புப் படைகளின் 'செயல் பாட்டுகளை' பிரதமர் நேரில் காணவுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4 ஆம் தேதி கடற்படை தினம் கொண்டாடப் படுகிறது. சிந்துதுர்க்கில் 'கப்பற்படை தினம் 2023' கொண்டாட்டங்கள் சத்ரபதி சிவாஜி மகாராஜின் வளமான கடல்சார் பாரம்பரியத்திற்கு மரியாதை செலுத்துகின்றன, அதன் முத்திரை புதிய கடற்படைக் கொடியை ஊக்கப்படுத்தியது, இது கடந்த ஆண்டு பிரதமர் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்தை இயக்கியபோது ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும், கடற்படை தினத்தையொட்டி, இந்திய கடற்படையின் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், விமானங்கள் மற்றும் சிறப்புப் படைகள் மூலம் 'செயல்பாட்டு ஆர்ப்பாட்டங்கள்' நடத்துவது வழக்கம். இந்த 'செயல்பாட்டு ஆர்ப்பாட்டங்கள்' இந்திய கடற்படையால் மேற்கொள்ளப் படும் பல-டொமைன் நடவடிக்கைகளின் பல்வேறு அம்சங்களைக் காணும் வாய்ப்பை மக்களுக்கு வழங்குகிறது. இது பொதுமக்களுக்கு தேசிய பாதுகாப்பிற்கான கடற்படையின் பங்களிப்புகளை எடுத்துக் காட்டுகிறது. அதே நேரத்தில் குடிமக்கள் மத்தியில் கடல்சார் உணர்வை வெளிப்படுத்துகிறது.
Input & Image courtesy: News